வெள்ளி, 4 ஜனவரி, 2013

உனக்காக மட்டும்

என் மனம் இரு கூறாய்
அங்கே நீ ஆணி வேராய்
இறுக்கி பிடிக்கிறாய்
உன்னை விட்டு
போகுமா  என் மனம்
சாகுமா என் கர்வம்


ஆயிரம் சோகங்கள்
ஆயிரம் தாபங்கள்
எனக்குள் இருப்பினும்
உன்னை நோக்கியே
நடக்குதே  என் பாதம்
அழிந்தே போகுதே என் கோபம்

கண்ணீர் துளியிலே
தெரியுமே உன் குணம்
உன்னை அணைக்கவே
விரையுமே என் கரம்
கலந்தே இருக்குமே என் புயம்
மலர்ந்தே இருக்குமே என் முகம்

சோகங்கள் வேண்டாமே
கண்ணீரும் வேண்டாமே
காலங்கள் உருண்டோட
என் காதல் கரை ஏறுமே
உன் மடியில் உறவாடுமே
ஒரு நொடியில் கரைதோடுமே

உனக்காக மட்டுமே
என் பெண்மை மலருமே
உன் தோளில் மாலையாவே
இப் பூவும் பூத்ததே
மாறி பூ பறிக்கப்பட்டால்
தான் மரித்தே போகுமே


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

1 கருத்து: