பொதுநலவாய கூட்டமைப்பால் ஏற்பட்டுள்ள நன்மை என்ன என்றால் வெளிநாடுகளில் உள்ள ஓரளவு சராசரி மக்களுக்கு இலங்கை பற்றிய ஓரளவு அறிவு கிடைக்க பெற்றுள்ளது என்பதாகும். அது தவிர தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வு கிடைக்கும் என்பது எமது தமிழ் கட்சிகளினதும் தமிழ் அரசியல்வாதிகளினதும் சரியான காய் நகர்த்தல்களில் மட்டுமே தங்கியுள்ளது. எமது தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்த குடையின் கீழ் ஓர் தீர்க்கமான தமிழ் மக்களை பாதிக்காத வரையில் விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்ள வேண்டியது எமது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.
அகிம்சை போராட்டமாக ஆரம்பித்த விடுதலை போராட்டம் ஆயுத போராட்டமாக வீரியம் பெற்று உலக சக்திகளால் அழித்து ஒடுக்கப்பட்ட நிகழ்வானது, வல்லாதிக்க சக்திகளுக்கு எதிராக நியாயமாக போராடி எந்த ஒரு வெற்றியையும் பெற்றுவிட முடியாது என்ற ஒரு கசப்பான உண்மையை மீண்டும் எமக்கு காட்டி நிற்கின்றது. பிரித்தானிய பாராளு மன்றத்தில் இலங்கை பற்றிய உரையானது வலிமை பெற வேண்டுமென்றால் இந்திய தமிழ் மக்களின் பங்கும் உலக தமிழ் மக்களின் பங்கும் மிகவும் இன்றியமையானது ஒன்றாகும்.
உலகத்தையே உள்ளங்கையில் கொண்டுவருமளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்த நிலையிலும் எம்மால் எமது பிரச்சனையை உலக அளவில் எடுத்து செல்ல முடியாதமைக்கு எமது ஒரு முக சிந்தனையும் எதிர்காலம் பற்றிய தெளிவான அறிவில்லாமையுமே காரணமாகும். ஒரு கடிதம் மட்டுமே வியட்நாமிய புரட்சிக்கு வழிவகுத்தது என்றால் நாம் நமக்காக எம் விடுதலைக்காக என்ன செய்கின்றோம் என்பதனை மீண்டும் மீண்டும் நினைத்து பார்க்கவேண்டிய கடைப்பாடு உள்ளவராக இருக்கின்றோம்.
விடுதலை போராட்டத்தின் ஆணிவேர் நோக்கமானது எமது மக்கள் தமது சொந்த இடத்தில் எந்தவொரு இடர்பாடுக்களுமின்றி மனநிம்மதியுடன் வாழவேண்டும் என்பதே தவிர விடுதலை போராட்டத்தின் பெயரை சொல்லி பணம் சம்பாதிப்பதோ அல்லது சுயநல நோக்கில் புகழ் அடைவதோ அல்ல. நாம் எந்தவொரு நெருக்கடியான சூழலிலும் எமது அபிலாசைகளை விட்டுக்கொடுக்காது பயணித்தோம்.இன்று எமது ஆசைகளையும் விருப்புக்களையும் உலகெங்கும் பரந்து பட்டு வாழும் தமிழ் மக்களின் கைகளிலும் நெஞ்சிலும் விட்டு செல்கின்றோம்.அவற்றை நீங்கள் நிச்சயம் நிறைவேற்றுவீர்கள் என்று ஆணித்தரமாக நம்புகின்றோம்.
எனவே மதிப்புக்குரிய தமிழ் மக்களே, அரசியல்வாதிகளே
எமது விடுதலை போரின் உண்மையையும் அதன் பற்றையும் நன்கு அறிந்து உண்மையான அர்பணிப்புடனும் இதய சுத்தியுடனும் செயற்படுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம்.
இப்படிக்கு மண்ணில் இருந்து
ஒரு மாவீரம்

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக