வெள்ளி, 28 நவம்பர், 2014

காதல் இதுதானா

உன்னை விட்டு நான் பிரிந்தேனா 
என்னை விட்டு நீ பிரிந்தாயா 
கேள்விகளை உள்ளம் கேட்கின்றதே 
ஊமையாய் கண்கள் வேர்க்கின்றதே 

விரசங்கள் இல்லாமல் விளையாடினோம் 
களங்கங்கள் செய்யாமல் உறவாடினோம் 
நியமான காதலில் நாம் மூழ்கினோம் 
நிரந்தரமில்லாமல் பறந்தோடி னோம்

நம் காதல் இங்கே தோற்கவே இல்லை 
காதலர் நாங்கள் தோற்றே போனோம் 
உருகிய என் காதல் உறையவே இல்லை 
பருகிய சுவையும் குறையவே இல்லை 

பாதைகள் மாறி பயணிக்க நீயும் 
பாவை நானும் பதறியே போக 
என் காதல் திமிரும் ஒடுங்கியே போக 
ஏழை மகளின் இதயமும் வாட 
இதய கதைவை எதோ தாக்க 

துன்ப சுமைகள் போதுமே உயிரே 
இந்த உடலை விட்டிடு உயிரே 
வேண்டாம் வேண்டாம் கனவுகள் வேண்டாம் 
அவனின் நொடி பார்வையும் வேண்டாம் 

அவனின் பெயரை மறந்திடுவேனா 
அவனின் நினைவில் மயங்கிடுவேனா 
உயிரே உயிரே ஒருமுறை சொல்லு 
என்றும் இவன் உனக்கே என்று 

உயிர்வரை உயிர்வரை வலிக்கின்றதே 
நெருங்கிய கனவுகள் உயிர்கின்றதே 
காதல் பிச்சை கேட்காதே அறிவும் எனக்கு சொல்கின்றதே 
உள்ளம் கேட்க மறுக்கின்றதே 
உணர்ச்சி கடலில் குதிக்கின்றதே 

காதல் பிச்சை தருவாயா 
கண்மணி நிலவை தொடுவாயா 
பள்ளியறை பாடம் கற்போமா 
மீண்டும் மழலாய் மகிழ்வோமா 

உந்தன் உயிரை நானும் சுமக்க 
எந்தன் சுமையை நீயும் சுமக்க 
பழகிய நினைவுகள் எரிக்கின்றதே 
என்ன சொல்வேன் எப்படி சொல்வேன் 

நாடி நாளம் அடங்குகின்றதே 
அன்பே அன்பே நீ வருவாயா 
அம்மு என்று அழைத்திடுவாயா 
எப்படி முடிந்தது உனக்கு மட்டும் 
உயிர்வரை என்னை கொல்ல 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக