காதலில் தோல்வியா புரியவில்லை?
பக்கம் பக்கமாய் கவிதையில்
காதலின் வலியை மூச்சு முட்ட
எழுதும் காதலர்களே!
உண்மை காதல் என்றும் தோற்பதே
இல்லை.காதலர்கள் மட்டுமே தோற்று
போகின்றார்கள். எதனையும் எதிர்பாராத
அன்புதான் காதல் என்றால் எதிர்பார்ப்பு
இல்லாத இடத்தில் ஏமாற்றம் எங்குள்ளது?
நீங்கள் விரும்பும் எல்லாமாக காதல் இருக்க
மாட்டாது.காதல் விரும்பும் ஜீவனாக நீங்கள்
இருங்கள். காதல் ஒருபோதும் தோற்க போவதில்லை.
உண்மை காதல் தாயை போன்றது.
தன் உதிரத்தை பாலாக்கி சேயை காக்கும் தன்மை
கொண்டது. காதலர்களே நீங்களே தாயாகுங்கள்.
காதல் தோல்விகள் உங்களை தாக்க போவதில்லை.
காதலில் வன்முறைகள் வேண்டாமே!
காதலில் தற்கொலைகள் வேண்டாமே!
காதல் தூய்மையானது
பக்கம் இருந்தாலும்
தொலைவில் தொலைந்தாலும்
களங்கமில்லாதது.....
காதலை நாம் காதலிப்போம்
காதலால் நாம் முழுமையாவோம்
காதலை நாம் வாழவைப்போம்
காதலால் நாம் மரித்திடுவோம்
காதலில் நாம் நிலாவாய்
எப்போதும் குளிர்மையாய்
எந்நாளும் வாழ்ந்திடுவோம்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக