செவ்வாய், 9 டிசம்பர், 2014

காதலில் உருகினேன்


ஆயிரம் நிலவு பூமியில் வருமே
அன்பே உன்னை காண 
அழகிய தீயே மயங்கினேன் நானே 
அடைக்கலம் தருவாயா ஆழியில் 
கொல்வாயா 
சொல்லடி சொல்லடி என் வாட்சப் 
தேவதையே

காதலில் உருகினேன்
கல்லறையில் தூங்கினேன்
கடைக்கண் பார்வை கிடைக்காமல்
வைபர் மணி ஒலி கேட்கிறதே
நாடி நரம்பை தாக்கிறதே
ஊனம் இங்கே உருகின்றதே
பாவி மனமோ  உறைகின்றதே
இந்த ஜென்மம் முடிப்பேனா
இன்னொரு ஜென்மம் தருவாயா
ட்விட்டரில் டூ விட்ட ராட்சசியே

காதலால் கசிந்தேன்
கண்களால் பிழிந்தேன்
எபோலா வைரசாய் காதல்
என்னை துரத்துகின்றதே
காதல் கான்சராய் வருவாயா
முத்தத்தால் அன்ரிபயோரிக் தருவாயா
விடியும் பொழுதுகள் இரவாக
தொலையா தொலையா கனவாக
நினைவுகள் நெருப்பாய் கொதிக்கின்றதே
பேஸ் லைனில் ஒருமுறை வருவாயா
வாஷ் பண்ணா பேஸ்ஐ பார்ப்பேனா
மெசன்சரில் தூ விட்ட சூரியே
 
சினாப் சாட்டில் பாய் சொல்லி போகாதே
ஆன்லைனில் ஆப் லைன் போடாதே
கிரீன் சிக்னல் போட்ட காதலுக்கு
ரெட்  சிக்னல் போடாதே
உன் மம்மி கிட்ட கேட்டு பாரு
உன் டாடி கிட்ட கேட்டு பாரு
காதல் என்ன இந்திய மின்சார வாரியமா
எப்போதும் டிமிக்கி கொடுப்பதற்கு
வைகை ஆறாய்  ஓடும் காதல்
உன் வாசல் கதவை தட்டிடும் ஒருநாள்

காதலுடன் இவன் உன்
டுபுக்கு







0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக