கண்ணீரில் ஒரு கடிதம்
உனக்காக வரைக்கின்றேன்
காதல் தந்த சின்னவனே
கண்ணீரில் வாழ்கின்றேன்
உன்னை எங்கே நான் தொலைத்தேன்
என் வாழ்வின் ஒளியானவனே
உன்னை எங்கே நான் இழந்தேன்
என் உதிரங்கள் உறைகின்றதே
உன் பெயர் சொல்லி அழுகின்றதே
நீ பேசிய வார்த்தைகளை கடுகு
மணியாக கோர்க்கின்றதே
கருணைகள் காட்டிவிடு
இந்த கண்மணியை சேர்த்துவிடு
ஒருவார்த்தை உரைப்பாயா
என் உயிரோடு கலப்பாயா
தொண்டைக்குள் உருண்டையொன்று
சோகத்தில் அமிழ்ந்துநின்று
துயரத்தின் எல்லையினை
சுடர்விட்டு காட்டுகின்றதே
அழகான கனவொன்றை
எனக்காக வரைந்தவனே
என்னுயிரில் சரி பாதியாய்
என்னோடு வாழ்ந்தவனே
இந்த துயரங்களை துடைத்துவிடு
இந்த உலகமதில் வாழவிடு
காதலுடன் இவள் உன் நிலா
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக