இன்றைய காலகட்டத்தில் உள்ள வணிக போட்டிக்கு முகம் கொடுக்க முடியாத பல வணிக நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பர உக்தியை கையாளுகின்றன.இந்த கவர்ச்சியான விளம்பர உக்தியானது மனிதனை நல்வழிபடுத்தும், சமூக சிந்தனையை மேம்படுத்தும் உலக சிந்தனைக்கு நிகராக எமது சமூகத்தை எடுத்து செல்லும் பத்திரிகை துறையிலும் கால்பதித்ததே மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
ஒரு சூழலில் நடக்கும் அநியாயங்களையும்,அக்கிரமங்களையும் தட்டி கேட்க தமது பேனாவை ஆயுதமாக பயன்படுத்திய பலர் இன்று ஆபாச பதிவுகளை எழுதவும் மிகவும் மோசமான ஊர் வம்புகளை பரப்பவுமே பயன்படுத்துகின்றனர்.
இற்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்னர் வெறும் சினிமாவை பற்றி மட்டுமே வெளிவந்த கிசுகிசு அதன் பின்னர் அதில் நடித்த நடிகர்களை பற்றி வெளிவந்தது. கால ஓட்டத்தில் நடிகர்களிடம் இருந்து நடிகைகள் மீது கிசுகிசு அதிகளவில் வெளிவர ஆரம்பித்தது.அதன் பின்னர் ஏற்பட்ட கால சுழற்சியில் மெல்ல மெல்ல ஒவ்வொரு ஊரில் ஏற்படும் அசிங்கமான ஆபாசமான விடயங்கள் வெளிவர தொடங்கின.
ஆரம்ப காலங்களில் சமுதாயத்தில் இவ்வாறான மோசமான கலாச்சார சீர்கேடு நடைபெறுகின்றதா? என்று வெருண்டு எழுந்த நாம் அதன் பின்னர் அந்த நிகழ்வுகளை ஆபாசமான பதிவுகளை ரசித்து படிக்க ஆரம்பித்தோம். எங்கேயோ எப்போதோ நடைபெற்ற ஆபாச நடவடிக்கைகள் மெது மெதுவாக பல்கலைகழகங்கள், வணிக நிறுவனங்கள்,கல்லூரிகள் என வைரஸ் கிருமி போல பரவ ஆரம்பித்தது.அதாவது பாலியல் துன்புறுத்தல்களை வெளி உலகிற்கு கொண்டு வருகின்றோம் என்று ஆட்டம் போட்ட பத்திரிகைகளும் இணைய தளங்களும் மறைமுகமாக பாலியல் துன்புறுத்தல்கள்,ஆக்கங்கள் என்ற பெயரில் மிகவும் ஆபாசமான காட்சிகளையும் படங்களையும் சமூகத்தின் முன்னால் படம் போட்டு காட்டின. இந்த காட்சிகளையும் எழுத்துக்களையும் வாசித்த எமது இளைய சமுதாயமானது எதிர்மறையான சமூக மாற்றத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.ஆதாவது முன்னர் 20 வயதுக்கு மேற்பட்ட வயதில் இருந்த பாலியல் துன்புறுத்தல்கள் இன்று 10 வயதிற்கு மேற்பட்ட இளைய சமுதாயத்தின் மீது வலுக்கட்டயாமாக திணிக்கபட்டது.இப்படியான கேடுகெட்ட நிகழ்வுகள் அதிகம் இடம்பெற முழுக்க முழுக்க காரணியாக இருப்பது எமது சமூகத்தின் பத்திரிகை இணைய நிறுவனங்களும் சினிமா தாக்கமுமே அன்றி வேறுதுவும் இல்லை.
ஆரம்ப காலங்களின் நண்பர்களை மட்டுமே அறிய, அவர்களை மட்டுமே தேட பயன்பட்ட சமூக வலைத்தளங்கள் இன்று மிகவும் கேடுகெட்ட பதிவுகளை மேற்கொள்ளவும் ஆபாச படங்களை பதிந்து கொள்ளவும் மட்டுமே பயன்படுகின்றது.ஆரம்பத்தில் எங்கோ கண்ணுக்கு தெரியாத மனிதர்களை பற்றி மட்டுமே வதந்திகளை எழுதியும் பரப்பியும் வந்த நாம் இன்று எம்முடன் நெருங்கி பழகி கருத்து முரண்பாட்டால் பிரிந்தவர்களை மிகவும் கீழ்த்தரமாக எமது கற்பனைக்கு மேலான கருத்துக்களை எழுதி, எமது கீழ்த்தரமான சிந்தனைகளின் வழியில் அவதூறுகளை பரப்பவுமே பயன்படுத்துகின்றோம்.
இந்த மோசமான எழுத்து கலாச்சாரமானது மாற்றமடையா வரையில் எமது கலாச்சாரத்தையோ பண்பாட்டையோ நாம் கட்டி பாதுகாக்க முடியாது. எமது விடுதலை இயக்க கட்டமைப்பானது மிகவும் ஒழுக்க கட்டமைப்பாக விளங்கவும்
உலகமே வியந்து நோக்கவும் ஆணிவேராக இருந்தது, எமது விடுதலை போராட்ட காலங்களில் ஆபாச படங்களோ சமூக தளங்களோ அவதூறான பத்திரிகைகளோ தோற்றம் பெற அனுமதிக்காததே. கீழ் தரப்பட மூன்றாம் தர பத்திரிகைகள் எமது ஈழத்தில் முற்றுமுழுதாக தடையாக இருந்தது. இந்திய சினிமா எமது ஈழ தேசத்தில் தடையாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டமானது மூன்றாம் தர பத்திகைகளின் ஆதிக்கத்தில் வாழும் காலமாக உள்ளது.
ஈழத்தை பொறுத்தவரை தனது ஆதிக்கத்தை செலுத்தும் கீழ்த்தரமான இணைய செய்தியாக விளங்குவது ''நியூ யப்னா'' என்ற இணையமே.ஆரம்பத்தில் மிகவும் கேடுகெட்ட செய்திகளை மட்டுமே எழுதி வந்த இந்த இணையம் இன்று ''ஜனநாய போராளிகள் கட்சிக்கு'' வக்காலத்து வாங்குவதன் மூலம் தனது உண்மை முகம் என்ன என்பதனை எமக்கு தெளிவு படுத்தி உள்ளது.
ஐரோப்பாவை பொருத்தவரை லங்கா ஸ்ரீ என்ற இணையதளமே தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.இந்த இணையத்தளமானது மிகவும் பழமையான செய்திகளை வேறு பத்திரிகைகளில் இருந்து திருடி போடுவதும், இறந்தவர்களில் தகவல்களை உலக தமிழருக்கு எடுத்து செல்லும் ஒரு செத்தவீட்டு இணையம் என்றே சொல்ல முடியும். இந்த இணையமானது ஒரு சிங்களவர் பெயரில் பிரித்தானியாவில் பதியப்பட்டு சுவிஸ் நாட்டை தலைமையகமாக கொண்டு செயற்படுகின்றது.எனவே இப்படியான இணையங்கள் எமது மக்களை நல்வழிபடுத்துவதற்கு பதிலாக மிகவும் மோசமான கலாச்சார சகதிக்குள்ளேயே தள்ளி விடுகின்றது.
ஒட்டுமொத்தமாக இன்று ஒரு உயர்தர பத்திரிகையாகவோ அல்லது செய்தி தொடர்பாடலாகவோ எந்த ஒரு பத்திரிகைகளையும் செய்திகளையும் சொல்லி விட முடியவில்லை.இன்றைய இணைய தளங்கள் எல்லாம் தமது வணிக நோக்கில் பணத்தை உழைக்கும் ஒரு ஈன எழுத்தாகாவும் செய்தி தளங்களாகவும் விளங்குகின்றன.இந்த நிலை நீடிக்குமானால் எமது உயர்ந்த அறிவானது மிகவும் மோசமாக பாதிக்கபட்டு கற்கால மனித நிலைக்கு மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் இவ்வாறு ஒரு மோசமான அறிவு வீழ்ச்சிக்குள் வாழ்ந்தோமானால் எம்மால் ஒரு கலாச்சார பண்பாடான சமுதாயத்தை கட்டி அமைக்க முடியாது என்பதே நிதர்சனம்,,
நன்றி
எழுத்தாக்கம்
காவியா

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக