வெள்ளி, 6 மே, 2016

‎நம்மவர்படைப்பு‬ (‎முகவலைஅறிவிப்புக்கள்)‬



இன்றைய புலம்பெயர் தமிழரின் மனச்சிக்கலையும் அறிவுப்பிறழ்
வையும் சொல்ல முற்பட்ட முகவலை அறிவிப்புக்கள் என்ற குறும்படம் தான் சொல்லவந்த விடயத்தை சரியாகவே சொல்லி நிற்கின்றது.
இன்றைய புலம்பெயர் தமிழர்களின் உண்மை நிலையை கண்முன்னே நிறுத்திய இந்த குறும்படத்தில் நடித்த அனைவரும் தனது பணியை ஓரளவு சரியாக செய்தார்கள் என்று கூறலாம்.
மீனாவாக வரும் நடிகை வீட்டை விட்டு வெளியேறும் போது முகவலையை பாருங்கள் என்று சொன்னது கொஞ்சம் அதிகாரமாக ஒலித்தது.
பெண்கள் மட்டுமே முகவலை விரும்பிகள் பொறாமை பிடித்தவர்கள், ஆசை கூடியவர்கள் என்று கூறினால் மட்டுமே குறும்படம் வெற்றியை நோக்கி நகரும் என்று எண்ணுவது நாம் பொருளாதார ரீதியில் வெற்றி பெற்றவராக வலம்வந்தாலும் ஆண்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படாத தன்மையையே வெளிப்படுத்தி நிற்கின்றது.
மீனா தனக்கு பிடித்த எல்லாவற்றையும் முகவலையில் பதிவு செய்தாலும் அவரது பொறாமை ஒரே ஒரு இடத்தில் மட்டுமே சுட்டிக்காட்டியது மீனாவின் மனச்சிக்கலுக்கு போதுமான காரணியாக அமையவில்லை என்றே கூறத் தோன்றுகின்றது.
அநேக மனங்களில் வாழும் உண்மை சம்பவம் என்பதால் அனைவரும் தமது கற்பனைக்கு ஏற்ப குறும்படத்தை ரசித்து இருகின்றார்கள் என்றே கூறலாம். மீனாவின் காதாபாத்திரம் இன்னும் ஆழமாக செதுக்கப்பட்டு இருந்தால் இமாலய வெற்றியை அடைந்திருக்கும்.
காட்சி எடுக்கபட்ட இடங்கள், ஒளிப்பதிவு. கதைக்கேற்ப அமைந்திருப்பது சிறப்பு. கடைசியாக ஒலிக்கவிடப்பட்ட உண்மை தரவே இந்த குறும்படத்தின் மைல்கல்
‪#‎மொத்தத்தில்_முகவலை_அறிவிப்புக்கள்_புலம்பெயர்_தமிழரின்‬ ‪#‎அறியாமையின்_சுவடுகள்‬
"
********இணைந்திருங்கள்********
‪#‎ஈழத்து_சினிமா_சாதனையும்_வேதனையும்‬" இது மாற்றத்துக்கான வழி
என்றும் அன்புடன்
♡காவியா
https://www.youtube.com/watch?v=e7TJ4t7Vlhk

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக