பல்கலைகழக மாணவர்களிடையே சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்க கொண்டுவரப்பட ஒரு முறையே ''ராக்கிங்'' என்பதாகும். அந்த ''ராக்கிங்'' என்ற பொறிமுறை எவ்வாறு மாறி பல்கலைகழக மாணவர்களை எப்படி காட்டுமிராண்டிகளாக மாற்றியிருக்கின்றது
என்பதனை கண்முன்னே நிறுத்திய ''முறிந்த ஏணி'' இன்றைய காலத்தின் கட்டாயப் படைப்பு.
நீண்ட கனவுகளுடன் ஆரம்பித்த கதாநாயகனின் வாழ்வும் எண்ணமும் எவ்வாறு படித்த காவாலிகளால் சிதறடிக்கபட்டது என்பதனை கண்முன்னே நிறுத்திய ''ஜோயல் குழுமத்திற்கு'' எமது மனமார்ந்த நன்றிகள்.
குறும்படம் என்பதனை மறந்த நாம், எம் கண்முன்னே ஒரு கொடுமை அரங்கேறியது போன்ற காட்சியமைப்பும் நடிப்பும் படத்தொகுப்பும் காலத்தால் அறியாத ஒரு காவிய படைப்பாக வாழும் என்பது எமது நம்பிக்கை. படம் ஆரம்பிக்கப்பட்ட போதில் சிறு சிறு கமரா கோணத் தவறுகள் இருந்தாலும் படம் பார்த்து முடிந்த போது எம்மை அறியாமலே கண்ணில் நீர் வரவைத்த இயக்குனருக்கு ஒரு சபாஷ்.
தோழியோடு பேசும்போது நடிப்பை கோட்டைவிட்ட கதாநாயகன் கொடுமைகளை அனுபவிக்கும்போது நடித்த நடிப்பில் விட்ட இடத்தை பிடித்துவிட்டார். பாடல்வரிகள் விளங்காத தன்மையும் இந்த படத்தின் குறை என்று கூற முடியும். அது தவிர நாயகன் கொடுமைகளை அனுபவித்து விட்டு வரும் நேரமும் அதன் பின்னர் வரும் காட்சியும் அமைவாக இல்லை.(மாலை நேரத்தில் அப்படி உறங்குவார்களா) கவனித்து இருந்தால் சிறப்பு.காட்சியமைப்பு அநேக சமயத்தில் ஒரேமாதிரி இருப்பது கவனிக்க வேண்டும்.
தோட்ட மரங்கள் நிறைந்த ஒரு வீட்டில் இவ்வளவு வறுமை இருந்திருக்குமா? மற்றைய படங்கள் எடுக்கும் போது படப்பிடிப்பு
நடத்தப்படும் இடங்களை கதைக்கேற்ப தெரிவு செய்தல் சிறப்பு.
#மொத்தத்தில்_முறிந்த_ஏணி_பல்கலைகழகத்தில்_நடைபெறும் #கொடுமையின்_ஒரு_பாதி
"#ஈழத்து_சினிமா_சாதனையும்_வேதனையும்" இது மாற்றத்துக்கான வழி
என்றும் அன்புடன்
காவியா
https://www.youtube.com/watch?v=H0BebIey-co

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக