செவ்வாய், 17 மே, 2016

கண்ணீர் பூக்கள்

வருண பகவான் விடும் 
கண்ணீர்த்துளியில் மலர்ந்துவிடுமா
எம் கருகிய பூக்கள்
பூமித்தாயின் அனலை
தீர்க்க அல்லலுறும் எம் 
உதிரங்களை இன்னும்
துன்பச்சுமையில் தள்ளாதே
நாம் வணங்கும் பூமித்தாயே
அழிவும் பிணியும்
துன்பமும் சுமையும்
கோபமும் குதர்க்கமும்
சூதும் கொலையும்
கணக்கில்லா கபடமும்
நீசரின் ஆட்சியும் நீங்கிட
அருள்செய்யும் சிலுவை
சுமந்த நாயகரே
ஐ பொழுதும் அல்லா
நாமம் மறக்காமல் ஓத
இன்ஷா அல்லாஹ் இதயத்தில்
நிறுத்தி பெரும் துயர்
துடையும் மக்கா மதீனா
வாசல் வந்தே வணங்குகின்றேன்
எம் துன்பம் நீக்க உம்கரங்களை தேடுகின்றேன்
அன்பே நீயாய் ஐம்புலமும் நீயாய்
கைலை நாயக அரசனும் நீயாய்
எங்கோ அலையும் எம் ஊனம்
உம்மை சேரும் பொழுதினில்
தாயாய் தந்தையாய் எம்மை
காக்கவே வேண்டுகின்றேன்
உலகை ஆளும் எம் பெருமானே
உணர்வில் கலந்த ஈசனே நீயே

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக