கலாச்சார அழிவு நிகழ்த்தப்படுவதன் நோக்கம் என்ன ?
கலாச்சார அழிப்பினை மேற்கொள்வதன் மூலம் ஒரு போர் நடந்து முடிந்த நாட்டில் ஆதிக்க சக்திகள் சாதிக்க நினைப்பது என்ன? என்ற ஒரு அலசலை இங்கு ஆராய்வோம்..
கலாச்சார அழிவு என்பது ஒரு தொன்மை மிக்க பாரம்பரிய இனத்தின் அழகியலையும் அதன் பண்பாடு விழுமியங்களையும் இல்லாதொழிக்க பண்பாட்டு பாரம்பரியத்தின் பக்க வேர்களாக இருக்கும் கலாச்சாரத்தை வெட்டி விடுவதன் மூலம் அதன் ஆணிவேரை அடையாளங்கள் இன்றி சாய்த்து விடுதலே ''கலாச்சார அழிவு'' என்று பொருள் கொள்ள முடியும்.

தமிழர் நாகரீகம் பண்பாடு கலை இலக்கியம் என நீண்டதொரு கட்டமைப்பை கொண்ட ஒரு பாரம்பரியம் மிக்க ஒரு தனித்துவமான இனமாகும். இந்த இனத்தின் வளர்ச்சியும் மேன்மையும் ஆதிக்க சக்திகளின் கண்களுக்கு என்றுமே ஒரு இடையூறாகவே இருந்து வருகின்றது. தொன்மை மிக்க தமிழ் இனமானது பரந்து வாழும் பூமியாக இந்தியா, ஈழம் மலேசியா, சிங்கபூர், ஆகியவற்றை கூறமுடியும். யுத்த சூழலின் பின்னர் உலகம் எங்கும் தமிழ் இன மக்கள் சிதறி வாழ்ந்தாலும் தமிழருக்கு ஒரு நாடு வேண்டும் என்று போராடிய ஈழத்திலேயே தமது கலாச்சார அழிவை முழு மூச்சுடன் ஈடுபடுத்த ஆதிக்க சக்திகள் முனைப்புடன் செயற்படுகின்றன.
இந்தியாவை பொருத்தவரை ஆதிக்க சக்திகளுக்கு பெரியதொரு தலையிடி என்றும் வர போவதில்லை.ஏனெனில் அங்கே சாதிய, மத வாதங்களே அதிகளவில் நாட்டினை ஆளும் சக்தியாக விளங்குவதால் இந்தியாவை என்றும் தமது பிடிக்குள் வைக்க முடியும் என்று ஆதிக்க மேலாண்மை சக்திகள் நம்பி இருக்கின்றது.
மலேசியா சிங்கபூர் ஆகிய நாடுகளில் தமிழ் மக்கள் பரவி வாழ்ந்தாலும் அந்த மக்களால் ஆதிக்க சக்திகளுக்கு என்றும் ஒரு பெரிய தலைவலி வர போவதில்லை. வெறும் வாழும் தமிழ் மக்களாகவே அந்த நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றார்கள்.

ஆக இறுதியாக ஈழத்தையே கலாச்சார அழிப்புக்கு தேர்ந்து எடுத்து அதனை மிக சரியான முறையில் செயற்படுத்தவேண்டும் என்று அனைத்து சக்திகளும் ஒருமுகத்துடன் செயற்படுகின்றன.
ஈழத்தில் கலாச்சார சீர்கேட்டை உருவாகிவிடுவதன் மூலம் அங்கே வாழும் இளம்சமுதாயத்தை ஒரு பாரிய மனசிக்கலில் தள்ளிவிட்டு சிந்திக்க தெரியாத விலங்குகளாய் உருவாக்கி அடிமைகளாய் நடத்துவதே இந்த ஆதிக்க சக்திகளின் நோக்கமாகும்.
இன்றைய ஈழத்து கலாச்சார சிக்கல்களாக அதிகரித்து வரும் சினிமா மோகமும், சினிமா பற்றிய கனவையும் நாம் கூற முடியும். அது மட்டுமில்லாது தொழில்நுட்ப சாதனங்களும் அதன் மூலமான ஒன்று கூடல் நிகழ்வுகளையும் கூற முடியும். மேலும் படைப்புகள் என்று உருவாக்கப்படும் ஒரு பக்க சிந்தனை சார்விடயங்களும் பொறாமை, பழிதீர்க்கும் சிந்தனை,ஆபாச காட்சிகளில் மோகம் ஆகியவற்றையும் சுட்டிகாட்ட முடியும்.

இந்த கலாச்சார சீர்கேட்டை நடைமுறைபடுத்துவதன் மூலம் ஈழத்தில் தமிழ் மக்கள் கொடூரமாக கொலைசெய்யபட்ட வடுக்களையும் வரலாற்றையும் மூடி மறைத்து உலக நாச கோட்பாட்டை விஞ்சிய சிங்கள ஆதிக்க சக்தியை ''சாத்வீகமானவர்கள்'' என்று நிலைநிறுத்தமுடியும்.
ஒரு போரினால் அழிந்த தேசத்தில் ஆயிரம் ஆயிரம் வடுக்களும் வலிகளும் மறைந்திருக்க நாம் சினிமா மோகமும் பெண்ணின் மோகமும் ஆணின் மோகமும் கொண்டு சிற்றின்பத்தில் திளைக்கும் கேடுகெட்ட மானிடராய் வாழ்கின்றோம்.புலம்பெயர் வாழ் தமிழர்கள் நாவில் தமிழீழம் பேசி வேசங்கள் பூண்டு மோச தமிழராய் பணமிதப்பில் வாழும் அசிங்கங்களாக வாழ்கின்றோம் என்பதும் மறுக்க முடியாத உண்மையே. ஆக நாம் தமிழராக அடிமைகளாக கலாச்சார சீர்கேட்டில் அழியும் மந்தைகளாக வாழ்கின்றோம் என்பதே நிதர்சனம்....

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக