சமீபகாலமாக ஈழத்தில் பல தவறான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக கூறுபடுகின்றது. இதில் முக்கிய பங்கு வகிப்பவை பெண்கள் ஆண்களுக்கு இடையிலான பாலியல் பிரச்சனைகளே. குறித்த இந்த பிரச்சனையானது கடந்த சில வருடங்களாக நிகழ்வதாக நாம் நம்பிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் இந்த பிரச்சனை முதல் முதலில் எங்கே ஆரம்பட்டு இருக்கக்கூடும் என்று யாரேனும் அலசி ஆராய்ந்தோமா ? எப்போது பாலியல் சம்பந்தமான பிரச்சனைகள் ஈழத்தில் பெரியளவில் தொடங்கியது என்றால் தடுப்பு முகாம்களில் மக்கள் நீண்ட காலமாக அடைக்கப்பட்ட காலப்பகுதியில் என்பதை நாம் உணர மறுக்கின்றோம்.
குறித்த கட்டமைப்புக்குள் தனித்தனி வீடுகளாக சகல வசதிகளுடனும் வாழ்ந்த மக்கள் ஒரு குறுகிய நிலப்பரப்பில் தமது அடிப்படை தேவையை நிறைவேற்ற முடியாமல் சந்தர்ப்ப வசத்தால் இன்னொருவரிடம் கையேந்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட போது மக்களின் மனநிலையில் ஏற்பட்ட விரக்தியும் வெளியுலகில் இருந்து பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலமையும் பாலியல் தவறுகளின் வித்தென நாம் உணர்ந்திட வேண்டும்.
சிறு விதையாக போடப்பட்ட பாலியல் விசமானது போதை, வறுமை, இளவயதில் கணவனை/மனைவியை இழந்தவர்களின் எண்ணிக்கை, புரிதலற்ற திருமணங்களும் அதனால் ஏற்பட்ட பிரிவுகளும் போன்ற காரணிகளால் மேலும் மேலும் அதிகரிக்க தொடங்கியது. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களில் சிலர் சமூகசேவை என்ற பெயரில் வறுமைப்பட்ட குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுடனான உறவினை பேணி காலசுழற்சியில் சந்தர்ப்ப வசத்தால் தவறிழைத்தலும் இங்கே நிகழ்த்தவண்ணம் இருக்கின்றது.
அதுமட்டுமன்றி படித்த வர்க்க மக்களிடையேஏற்படும் தொழில் நெருக்கடியும் வீட்டினை பிரிந்து வாழும் நிலையும் பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு காரணமாகின்றது. புலம்பெயர் நாட்டில் வாழும் சில தமிழர்கள் தமது பாலியல் தேவையை பூர்த்திசெய்ய ஸ்பெயின், ஹொலண்ட், தாய்லாந்து ஆகிய நாடுகளை தேர்தெடுத்து தமது தேவையை பூர்த்திசெய்வது போல ஈழத்தில் வாழ்பவர்களும் தம்முடன் பணிபுரியும் அல்லது தமது தேவைக்கு தேவையானவர்களை பயன்படுத்தி கொள்கின்றார்கள்.ஆகவே மனித குலத்தின் தனிமனித ஒழுக்கம் என்பது கேள்விக்குறியாக இப்போது காணப்படுகின்றது என்பதனை யாரும் மறுக்க முடியாது.
குறித்த நிலையினை மாற்றிடவேண்டுமென்றால் ஒவ்வொரு மனிதனும் தனிமனித ஒழுக்கத்தின் நெறிமுறையை கருத்தில் கொள்ளவேண்டும் . புலம்பெயர் தேசத்தில் இருந்து தமது உடலியல் தேவையை பூர்த்திசெய்ய வேறு நாடுகளுக்கு செல்பவர்கள் தமது நிலைப்பாட்டினை மாற்றி ஒழுக்கமானவர்களாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.அதேபோல ஈழத்தில் வாழும் நபர்களும் தனிமனித ஒழுக்கம் பேணும் நபர்களாக இருப்பது அவசியம் எனலாம்.இந்த நிலையை நாம் மாற்றிட முன்வராது போனால் தமிழர்களின் ஒழுக்க கட்டமைப்பு சிதைவடைந்து எமது பண்பாடு நடைமுறையை அழித்துவிடுவோம், எந்த ஒரு இனமானது தனது பண்பா ட் டை அழிக்கின்றதே அந்த இனம் பூண்டோடு அழிந்துவிடும் என்பது வெளிப்படை உண்மை.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.என்ற வள்ளுவன் வாக்கை மனதில் நிறுத்தி தனிமனித ஒழுக்கம் பேணுவோம்.
உயிரினும் ஓம்பப் படும்.என்ற வள்ளுவன் வாக்கை மனதில் நிறுத்தி தனிமனித ஒழுக்கம் பேணுவோம்.
''தமிழர்களாக எமது இனத்தை,பண்பாட்டை பேணுவோம்''
நாம் யார்க்கும் குடியல்லோம்.
காவியா
27/03/19
00.15
லண்டன்
காவியா
27/03/19
00.15
லண்டன்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக