திங்கள், 25 மார்ச், 2019

தோழர் முகிலன் பற்றிய அவதூறை பரப்பும் பெண்ணுக்கு

தோழர் முகிலனது தனிப்பட்ட வாழ்வும் சமூகம் மீதுதான பார்வையும் வேறு வேறானவை. தனிப்பட்ட வாழ்வில் அந்த மனிதர் இருக்கும்போது எதனையும் வெளியில் கூறாமல் அந்த மனிதர் இல்லையென்று சரியாக உணர்ந்தவுடன் அவரை பற்றிய குற்றம் சுமத்துவது மிக மிக கேவலமான ஒரு நடவடிக்கையே...
இல்லாத மனிதர் எழுந்து வந்து சாட் சியம் சொல்ல போவதில்லை என்பதை அறிந்து கீழ்த்தரமான வேலையை செய்வதும் உறுதியாக இருந்து பேட்டியளித்த அவரது மனைவி இப்போது முன்னுக்கு பின் முரணாக கூறுவதும் பேரின சக்திகளின் பின்னணியில் நிகழ்வதை உணர முடியவில்லையா?
சரி இசை கூறுவதுபோல முகிலன் காதலிப்பதாக கூறினால் உங்களுக்கு அறிவு எங்கே சென்றது? அவர் ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் அவர்கள் சேர்ந்து வாழும்போது முகிலன் மீது உங்களுக்கு காதல் என்றால் அசிங்கமாக இருக்கின்றது.
ஒரு ஆண் சபலம் கொள்ளும்போது அந்த இடத்தில் இருந்து தந்திரமாக தப்பிக்க தெரிந்தவள் தான் பெண்.அதனை செய்யாது சமூக போராளியாக படித்த பெண்ணாக இருந்துகொண்டு தப்பினை செய்தது மட்டுமன்றி அதனை பொதுவெளியில் சொல்லி சமூக சேவை செய்ய இருக்கும் அல்லது செய்துகொண்டு இருக்கும் அத்தனை பேரின் ஒழுக்கத்திலும் கேடு விதைப்பதை நீங்கள் அறியவில்லையா ? யாரின் வழிநடத்தலில் இப்படியான விடயங்களை சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள்?
ஒரு ஆணுக்கு கண்ணில் உணர்வும் ஒரு பெண்ணிற்கு தூண்டுதலில் உணர்வும் ஏற்படுமாறு இறைவன் படைத்துள்ளான் ..இறைவனின் படைப்பே பெண்கள் இயற்கையிலேயே உணர்ச்சியை கட்டுப்படுத்த கூடியவர்களாக இருக்கின்றார்கள். உணர்ச்சியை கட்டுப்படுத்தி நீதியாக நியாயமாக ஒழுக்கமாக் செயற்படமுடியாவிட்டால் சமூக சேவை என்று யாரும் கிளம்பாதீர்கள் ....
உங்களின் காதல் உண்மையென்றால் உண்மையாக நேசித்த ஒருவரை பொதுவெளியில் இப்படி அசிங்கம் செய்ய எப்போதும் மனம்வராது ...அதிலும் முகிலன் சாதாரண ஒரு மனிதர் அல்ல.''அவர் மீதான பிரமிப்பில் காதல் என்று நீங்கள் அலைந்துவிட்டு'' இப்போது நீதி பேசுவது வேடிக்கையாக இருக்கின்றது. உங்களை முகிலன் காதல் செய்து ஏமாற்றினார் என்றாலும் சரி,,,
அவரை நேரடியாக கொண்டு வாருங்கள் நீதியினை அவரை வைத்து கேட்போம் ...அவர் தவறு செய்திருந்தால் நீங்களும் அவரது மனைவியாக வாழுங்கள் ..அது உங்களை தனிப்பட்ட விருப்பம் ஆனால் முதலில் முகிலனை கொண்டு வாருங்கள்.
நன்றி
காவியா
23/03/19
London
13.44

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக