உலக வரலாற்றில் சம காலப்பகுதியில் மிகவும் வீரியமாக தோற்றம் பெற்ற விடுதலை போராட்டங்களில் ஒன்றாக தமிழீழ விடுதலை போராட்டத்தை உற்று நோக்கலாம். குறுகிய நிலப்பரப்பில் இருந்து வீரியம்மிக்க சக்தியாக உருவாகிய ஈழப்போரின் ஆள அகலங்களை நாம் வார்த்தைகளால் விபரிக்க முடியாது. இந்த விடுதலை சக்தியை முழுமையாக இல்லாதொழிக்க அல்லது மௌனிக்க வைப்பதற்காக எந்தவிதமான நகர்வுகளை ஒவ்வொரு அரசாங்க சக்திகளும் ராஜதந்திர அறிவாளிகளும் சிந்தித்து இருப்பார்கள் என்பதை நாம் ஒரு குறுகிய வட்டத்தில் இருந்துகொண்டு விபரிக்க முடியாது.
ஒவ்வொரு நாட்டில் வாழும் நபர்களும் தமது சூழலை தாம் வசிக்கும் சுற்றாடலை வைத்தே கருத்துக்களை பரிமாற்றம் செய்வார்கள். சிலர் எங்கிருந்தோ கிடைக்கும் தகவல்களை வாசித்து அதுவே உண்மையென்று ஆழமாக நம்பிக்கொண்டு வாழ்ந்து முடிகின்றார்கள்.
எமது புலம்பெயர் தேச வாழ்வியலில் பல்லின மக்களின் நெருங்கிய பிணைப்பில் ஒவ்வொரு மக்களின் சூழலையும் சரிசமமாக உள்வாங்கக்கூடிய நிலையில் அதிகளவான மக்களின் எண்ணப்பாட்டினை உற்று நோக்குகையில் எம் இனத்தின் வீரமும் விவேகமும் அரசியல் ஆளுமையும் கல்வியின் சிறப்பியலும் வியந்து நோக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது.
எமது இனத்தின் ஆளுமை இன்று நேற்று உருவாக்கியதல்ல. அது காலம் காலமாக சந்ததி சந்ததியாக கடத்தப்பட்டு வருகின்றது. எம்மை போல இயற்கையிலேயே ஆளுமை பெற்றவர்களாக இஸ்ரேலியர்களும் சீக்கியர்களும் வாழ்கின்றார்கள் .அதேபோன்று செயற்கையாக தமது கடுமையான உழைப்பால் ஒழுங்கான பயிற்சியினால் சீனர்களும் ஜப்பானியர்களும் தமது ஆளுமையை சீராக்கிக்கொண்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் எமது ஆளுமையை நாம் ஒன்றாகி பாரியதொரு சக்தியாக மக்களின் எழுச்சியாக விடுதலை போராட்டத்தை கொண்டு நடத்தியிருந்தோம். இந்த விடுதலை போராட்டத்தை முற்றுமுழுதாக மௌனிக்க செய்ய பல வழிகளில் போராடிய சக்திகள் எமது கட்டமைப்புக்குள் பலவிதமான விச செடிகளை உருவாக்கி விட்டார்கள். இந்த விச செடிகளின் தொழிற்பாட்டினாலேயே
1)ஒருவரை ஒருவர் சந்தேகிக்கும் மனநிலையும்
2)மனித நேயமற்ற செயற்பாட்டின் அதிகரிப்பும்
3)பாலியல் தவறுகளும் ஒழுக்க கேள்விக்குறிகளும்
4)நம்பிக்கை துரோகங்களும் வதந்திகளை பரப்பும் செயற்பாடுகளும் தோற்றம் பெற்றது.
அது மட்டுமன்றி
ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தவறாக சித்தரிக்கும் மனப்பான்மையும் நானே எல்லாம் அறிந்தவன் என்று நிரூபிப்பதற்காக நீதியற்ற/ தெளிவான அறிவற்ற சமூக கருத்துக்களும் பரப்பட்டது.
2)மனித நேயமற்ற செயற்பாட்டின் அதிகரிப்பும்
3)பாலியல் தவறுகளும் ஒழுக்க கேள்விக்குறிகளும்
4)நம்பிக்கை துரோகங்களும் வதந்திகளை பரப்பும் செயற்பாடுகளும் தோற்றம் பெற்றது.
அது மட்டுமன்றி
ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தவறாக சித்தரிக்கும் மனப்பான்மையும் நானே எல்லாம் அறிந்தவன் என்று நிரூபிப்பதற்காக நீதியற்ற/ தெளிவான அறிவற்ற சமூக கருத்துக்களும் பரப்பட்டது.
மீள கட்டமைப்பு செய்து உறுதியாக எமக்கான நீதியை பெற்றுக்கொள்ள முனையும் தமிழர்களின் செயற்திட்டங்களை முடக்கும் செயற்பாட்டில் எமது வீழ்ச்சிக்கு வித்திட்ட பலரது பங்களிப்பு தொடர்ந்து செயற்பாட்டில் நடைபெற்றவண்ணம் இருக்கும். எம்மை வைத்து எமது போராட்டத்தை நசுக்கி எமக்கான தீர்வை பெற்றுத்தர விரும்பாத சக்திகளும் போரின் பெயரை சொல்லி சுயலாபம் காணும் சில சக்திகளும் எமக்கான நீதியான நடைமுறையை பெற்றுக்கொடுக்க போவதில்லை.
ஆகவே இங்கே நாம் விழிப்புணர்வு கொண்டவர்களாக வாழவேண்டியது அவசியமாகும். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நடவடிக்கையை முடக்கிவிட்டு அல்லது தேர்தலை புறக்கணித்து விட்டு எந்தவிதமான மாற்று திட்டத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி கருத்து கூறும் நபர்கள் கொண்டுவரப் போகின்றார்கள்???
எமது அமைப்புகளை ஒன்றிணைத்து நீதியான ஊடகங்களை உருவாக்கி உலக நாடுகளுடனான எமது நீதியான அபிலாசைகளை கொண்டு சென்று வலுவான கட்டமைப்புகளாக புலம்பெயர் கட்டமைப்புக்களை உருவாக்குவது அவசியம்.
ஒரு நடுநிலை ஊடகவியலாளராக ஒவ்வொரு அமைப்பின்மீதும் குற்றம் சொல்லி அந்த அமைப்புகளை எதுவுமற்ற ஒன்றாக மாற்றி எமது இனத்தின் வேர்களை ஒவ்வொன்றாக தகர்த்து எறியாமல் சரியான நபர்களை தேர்ந்தெடுத்து நீதியான தேர்தலை நடத்த ஆவண செய்திடல் அவசியம் என்பேன்.
இளைய சமுதாயத்தில் உள்ள சரியான நபர்களை தெரிந்தெடுத்து புலம்பெயர் நாட்டில் பிறந்து வளரும் எம் ஈழ இளையோரை சரியான முறையில் வழிநடத்தி இஸ்ரேலிய/ சீக்கியரின் ஆளுமையை போல நாமும் ஆளுமை மிக்கவர்களாக மாற்றம் பெற்று எமக்கான நீதியை வென்றெடுப்போம்.
காவியா
03/04/19
16.01
லண்டன்
03/04/19
16.01
லண்டன்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக