நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்றும் நிலைபெற்று இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் எமக்கு இருந்திட போவதில்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூலவேரில் ஏற்பட்ட தவறுகளும் அதனை களைந்து எடுக்காத தன்மையும் எம்மால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் குறித்த குற்றசாட்டினை நாடுகடந்த அரசாங்கம் என்ற ஒரு கட்டமைப்பில் வைப்பதிலும் அந்த அமைப்பில் பணியாற்றிய தவறான நபர்களின் மீது முன்வைப்பதே சரியான ஒன்றாக இருக்கும். நாடுகடந்த அரசாங்கம் என்ன செய்தது என்ற கேள்வியினை கேட்பதற்கு தமிழர்களாகிய உங்கள் ஒவ்வொருவரும் உரிமையுள்ள அதேநேரம் நீங்கள் நாடுகடந்த தமிழீழம் இவ்வாறு தான் செயற்படவேண்டும் என்று எப்போது உங்கள் கருத்துக்களை பதிவுசெய்ய முன்வந்தீர்கள்?
ஒரு அரசாங்கம் தவறு விடுவதாக இருப்பதற்கு காரணம் மக்களின் அசமந்த போக்கும் மக்களின் சுயநல நிலையும் , சமூகம் பற்றிய பூரண அறிவினை கொண்டிராத தன்மையும் முக்கிய காரணங்கள் எனலாம்.

புலத்தில் எண்ணிக்கையில் அடங்காத அகதி அந்தஸ்த்தை பெற்றுக்கொடுப்பதற்கு நாடுகடந்த அரசாங்கம் செயற்பட்டு இருப்பதுடன் தன்னால் முடிந்தளவான சில சமூக பணிகளில் ஈடுபட்டதாகவும் கூறுகின்றது . அதுமட்டுமன்றி புலம்பெயர் நாட்டில் இடம்பெறும் அநேக போராட்டங்களில் குறித்த அரசாங்கத்தின் அங்கத்தவர்கள் சமூகமளிப்பதும் நடந்தபடியே இருக்கின்றது.
தமிழினம் என்ற ஒரு இனம் பிரச்சனைகளில் சிக்கி வாழ்கின்றது என்பதை அடிக்கடி வெளிகாட்டிடும் ஒரு அமைப்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருப்பதை யாரும் மறுத்திட முடியாது.ஆனால்
குறித்த அமைப்பில் இருக்கும் குறைகளை களையவேண்டிய தேவை எமக்கு உண்டு என்பதும் நாடுகடந்த அரசாங்கத்தின் தேர்தல் காலப்பகுதியில் குறித்த அமைப்பின்மீது குறையினை கூறி குறித்த அமைப்பினை தொழிற்பட செய்ய முடியாமல் தடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,,,

நாடுகடந்த தமிழீழ அரங்கத்தின் தேர்தலுக்கு அனைவரும் உங்கள் ஒத்துழைப்பை வழங்குங்கள் ...
ஜனநாயக ரீதியான தேர்தலை செய்யுங்கள்
ஜனநாயக ரீதியான தேர்தலை செய்யுங்கள்
உருத்திரகுமார் மட்டுமே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவராக வரவேண்டுமா என்பதை தேர்தல் முடிவுகளே தீர்மானிக்க வேண்டுமே தவிர ஏற்கனவே இருக்கும் நபர்கள் அல்ல ...
ஜனநாயக தேர்தலை மட்டுமே நாம் ஆதரிக்கும் நிலையில் இருக்கின்றோம் ...
நாம் யார்க்கும் குடியல்லோம்
காவியா
21.50
02/04/19
லண்டன்
21.50
02/04/19
லண்டன்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக