செவ்வாய், 16 ஏப்ரல், 2019

நாம் தமிழரை ஏன் நாம் ஆதரிக்க வேண்டும்?

நாம் தமிழர் என்ற அமைப்பை ஈழ தமிழர் ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை 2008 ஆம் ஆண்டின் மாவீரர் நாள் உரையில் மேதகு அவர்கள் மிக தெளிவாகவே கூறியுள்ளார்.
ஈழ தமிழர் பிரச்சனை என்பது வெறும் ஈழத்துடன் நின்றுவிடும் பிரச்சனை அன்று.அது புவிசார் நலனையும் நோக்கியுள்ளது. காலம் காலமாக தமிழ்நாட்டினை திமுக/அதிமுக ஆகிய இரு மாபெரும் கட்சிகளே ஆண்டு வந்துள்ள நிலையில் தமிழீழ விடுதலை புலிகளின் எழுச்சிக்கு ஆரம்ப காலத்தில் எம் ஜி ஆர் இன் உதவி மத்திய அரசிற்கு தலைவலியாக இருக்கவில்லை. இலங்கையை தனது கைப்பிள்ளையாக வைத்திருக்கவே இந்தியா எப்போதும் விரும்புவதும் இந்தியாவின் செல்லப்பிள்ளையாக இலங்கை இருப்பதும் கடந்துவந்த பல சம்பவங்கள் எமக்கு தெளிவுபடுத்தியுள்ளது. இலங்கையில் உருவாகிய விடுதலைக் கட்டமைப்பின் வளர்ச்சியும் வேகமும் இந்தியாவிற்கு தலைவலியாக மாறியதால் ஒப்பந்த அடிப்படையில் விடுதலைப்போராட்டத்தை முடக்கி மௌனிக்க செய்வதில் இந்தியா பெரும் பங்கு வகித்தது. இலங்கையின் முக்கிய ஏற்றுமதியாளராக அமெரிக்காவும்/சீனாவும்/ இங்கிலாந்தும் விடுதலை போராட்டத்தின் மௌனத்திற்கு கைகோத்து கொண்டது.
இலங்கையின் முக்கிய இறக்குமதி நபராக இந்தியா இன்றும் தனது செல்வாக்கை செலுத்திக்கொண்டே இருக்கின்றது. குறித்த நிலைப்பாட்டில் இருந்து என்றும் இந்தியா மாறிட போவதில்லை.ஆனால் இந்தியாவின் ஆதிக்க தன்மையில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளை நாம் கொஞ்சமாவது குறைத்துவிட வேண்டுமென்றால் தமிழ் நாட்டில் தமிழர்களின் பலம் மேலோங்கி இருக்கவேண்டிய தேவை உண்டு.
கடந்த ஐம்பது வருடத்திற்கு மேலாக தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசங்களை மட்டுமே கொடுத்து மக்களை அடிமையாக்கி தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் மோசமாக பாதிப்படைய செய்ததில் திராவிட கட்சிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணலாம். இன்றும் ஏழை மக்கள் ஏழையாகவும் பணக்காரர் பணக்காரராகவும் இருக்கின்றார்கள்.ஆனால் நாட்டின் கடன்சுமையினை அனைத்து மக்களும் சுமக்கின்றார்கள். இந்திய நாடு கடன் சுமையில் மூழ்கியுள்ளபோதும் தனிமனித மனிதர்கள்/ அரசியல்வாதிகள் சுகபோகவாழ்வினை வாழ்கின்றார்கள். இந்த நிலை மாறவேண்டும் என்றால் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனது வாக்கினை சரியான நபர்களை தேர்ந்தெடுக்க பயன்படுத்த வேண்டும்.
இந்திய நாட்டில் பணக்காரர்கள் வாக்கிலும் ஏழைகளின் வாக்கே அதிகம்.ஆகையால் தமது வாக்கினை சரியாக பயன்படுத்துவார்களாக இருந்தால் இந்தியா சிறந்த தேசமாக மாறும். குறித்த காலத்தில் ஆத்ம கட்சி வெல்ல முடித்தால் என் நாம் தமிழரால் முடியாது?? காரணம் எம்மிடையே உள்ள வேற்றுமை மட்டுமே ...ஆகவே வேற்றுமையை மறந்து தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு நாம் தமிழருக்கு வாக்கினை அளியுங்கள். எந்த எந்த இடத்தில் நாம் தமிழர் நிற்கின்றதோ அங்கெல்லாம் நாம் தமிழரை வெல்ல வைக்காவிடிலும் குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் தோற்க வையுங்கள் .நீங்கள் அதுவே ஆட் சியாளருக்கு நீங்கள் கொடுக்கும் முன்னேற்பாட்டு கடிதம்.அதனை அவர்கள் புரிந்து சிறந்த அரசியலை செய்ய முன்வருவார்கள் ..வெற்றியா தோல்வியா என்பதை தாண்டி அரசியல்வாதிகளுக்கு மக்களுக்கு சரியான சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்க நாம் தமிழரை ஆதரியுங்கள்.
நாம் தமிழர் கட்சியினால் தனி தமிழீழம் அமையும் என்பது வேடிக்கையான விடயம் தான். அது சாத்தியமும் அன்று.தமிழ்நாட்டின் நலனை மட்டும் கருத்தில்கொண்டு சிறந்த திட்டங்களை வைத்துள்ள இளைஞர் அமைப்பை நாம் ஆதரிக்க வேண்டும்.
இந்திய நலன்சார் கொள்கையும்/வெளியுறவு கொள்கையும் மாற்றம் காணாதவரை ஈழத்தில் எந்தவொரு நிலைபாட்டிலும் தமிழ்நாட்டு அரசியல் தலைமைகளால மாற்றம் கொண்டுவர முடியாது. தமிழ்நாட்டில் நாம் தமிழர் என்றாவது ஒரு நாள் ஆட் சி மேடைக்கு ஏறினானாலும் மறைமுகமான ஈழ நலன்சார் நடவடிக்கையில்/ஈழ தமிழர்களின் மீது அக்கறை காட்டிட முடியுமே தவிர நேரடியாக எந்தவிதமான நகர்வுகளையும் மேற்கொள்ள முடியாது. அவ்வாறு மேற்கொள்ளவேண்டுமாயின் மிகவும் எளிமையான வாழ்வினை வாழவேண்டிய தேவை நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களுக்கு உண்டு.
''மாற்றம் ஒன்றே மாறாதது'' என்ற வாக்கு எவ்வளவு உண்மையோ அதன்படியே ''நாம் தமிழர்'' தமிழ்நாட்டில் காலூன்றும் சாத்தியங்கள் என்றோ நிகழும். அந்த_நிலைவரும்போது_விட்டுக்கொடுப்பில்லா தலைமையாக இருந்தால் பாரிய தலைமை இழப்பீடுகளும் ஏற்படலாம்.இந்திய வல்லாதிக்கம் அவ்வளவு இலகுவாக தமிழர்களை/ தமிழ் அரசியல்வாதிகளை மேடைக்கு அனுப்பிவிட மாட்டார்கள்...
வெற்றிகளின் பின்னாலே நிற்க விரும்பும் ஈழ தமிழர்கள் நாளை'' நாம் தமிழர்'' வெற்றிபெறும் நிலை வரும்போது தாம் முன்வைத்த விமர்சனங்களை மறந்துவிட்டு ''நாம் தமிழர்'' பின்னே அணிதிரளும் காலமும் உண்டு.
''தமிழ்'' என்ற மொழிமீது அக்கறையுள்ள தமிழர்கள் நாம் தமிழருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்...
எனது இந்த பதிவு நாம் தமிழர் எம் ஈழத்தில் தமிழீழம் பெற்றுத்தரும் என்ற கருத்தில் பதியப்படவில்லை. தமிழ்நாட்டு நலனில் உள்ள அக்கறையால் மட்டுமே பதியப்படுகின்றது...
காவியா
00.20
16/04/19
லண்டன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக