பெண்கள் ஒழுக்கமானவர்களாக இருக்க ஆண்களின் பங்களிப்பு என்ன??
பெண்ணியம் பேசும் பெண்களாக நீங்கள் இருக்கின்றீர்கள் உங்களுக்கு எதற்கு எங்கள் பாதுகாப்பு என்ற கேள்வி எப்படி உருவானது???
பெண்களின் திறமையை எத்தனை பேர் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றார்கள் ????
பெண்கள் மீதான பார்வையில் ஆண்கள் எப்படியான மாற்றத்தை கொண்டுவர வேண்டும்????

இந்த கேள்விகளுக்கான பதிலை வெளிக்கொண்டுவரவேண்டும் என்ற நோக்கிலேயே நேற்று இரு பதிவுகளை பதிந்திருந்தேன். ஈழத்தில் கற்புள்ள பெண்கள் இல்லை என்ற கருத்துப்பட ஒரு பதிவும், திருமணமாக ஆண்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட பெண்கள் மீது காதல் கொண்டு வாழ வேண்டும் என்று விசேட தினங்களில் வாழ்த்தும் ஆண்களின் மனநிலைக்குமான தொடர்பினை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் என்னால் குறித்த பதிவு எழுதப்பட்டு இருந்தது.
ஒரு ஆண்/பெண் ஒன்றிற்கு மேற்பட்ட பெண்கள்/ஆண்கள் மீது காதல் கொள்ள வேண்டும் என்பது எப்படியான சிந்தனையின் வெளிப்பாடு? இப்படியான சிந்தனை இளைய சமுதாயத்தில் எறியப்படும் போது எவ்வாறு குறித்த சமுதாயம் சிறப்பான சமுதாயமாக வாழும் நிலை தோன்றும்.
இன்றைய காலத்தில் தூய்மையான காதல் என்பது எதனடிப்படையில் நோக்கப்படுகின்றது???
பணம்/ அழகு/உடலியல் தேவையை பூர்த்திசெய்தல்/ பொழுதுபோக்கு/ காதலி அல்லது காதலன் இல்லையென்றால் அவமானம் என்று எண்ணும் மனநிலை.சினிமா காதலை உண்மையான காதல் என்று எண்ணும் பக்குவமற்ற அறிவு. இவற்றினால் மட்டுமே காதல் என்ற தூய்மையான சொற்தொடர் அவமானம் கொண்டு நிற்கின்றது....

பெண்கள் எல்லோருமே கெட்டவர்கள் என்ற மனநிலையும் ஆண்களில் பலர் பெண்களின் திறமையை ஏற்றுக்கொள்ள முன்வராத தன்மையும், பெண்கள் என்றால் அந்த அடையாளத்தை வைத்து தாம் செய்யும் தவறுகளில் இருந்து தப்பிவிடலாம் என்ற சிந்தனையுமே பல தவறுகளுக்கு காரணம் எனலாம் ...
''திருமணத்தின் முன்னரான உடலியல் தேவையின் பூர்த்தி என்பது மிகவும் அவசியமான ஒன்று'' என்ற மனநிலையில் மாற்றம் ஏற்படாத வரையில், தனிமனித ஒழுக்கத்தை பேண முடியாது.
''உடலுக்கும் மனதிற்கும் இடையிலான தொடர்பில் காதலின் உச்சகளிப்பிலேயே காமம் ஏற்பட வேண்டும் என்பதும்''
''காமத்தின் விளைவால் உடலில் ஏற்படும் மாற்றம் திருமணத்தின் பின்னர் மட்டுமே என்ற கொள்கையுறுதி இளைய சமுதாயத்தில் விதைக்கப்படா வரையிலும்''
தனிமனித ஒழுக்கம் கேள்விக்குறியாகும் என்பதுடன், கலாச்சார பண்பாட்டின் அழிவினை தடுத்து நிறுத்த முடியாது. ''காதலின் பிடியில் ஒருவருடன் ஏற்பட்ட உடலியல் தேவையின் பூர்த்தியின் பின்னர், வேறு ஒரு உறவினை நாடாத தன்மை ஒவ்வொரு ஆண்களிடமும் பெண்களிடமும் தோன்றிட வேண்டும்.
''காதல் என்பது உண்மையானதாக நீதியானதாக இருக்கின்றதா என்பதை காதலிக்கும்போதே ஒவ்வொருவரும் உணர்ந்திட வேண்டும்''.
தவறான ஆணையோ பெண்ணையோ காதலித்த நபர்கள் காலம் முழுவதும் குறித்த நபரையே திருமணம் செய்து வாழ்ந்திட வேண்டும் என்பது எதிர்காலத்தில் தவறான தொடர்பிற்கே வழிவகை செய்யும்.
'' காதலியுங்கள்'' ஆனால் காமம் திருமணத்தின் பின்னர் மட்டுமே என உறுதியான கொள்கையுடன் பயணியுங்கள்...
''காதலில் உள்ள காதலனும் காதலியும் தனிமையாக சந்திக்கும் சந்தர்ப்பங்களை தவிருங்கள்''...
காவியா
02/04/19
10.55
லண்டன்
02/04/19
10.55
லண்டன்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக