புதன், 15 மே, 2019

இந்தியா எமது நண்பரா?

உண்மையில் இந்திய அரசு தனது உளவுப்படை மூலம் இயக்கங்களுக்கிடையே மோதல்களை உருவாக்கியது. இயக்கங்கள் ஒன்றுக்கொன்று மோதி அழிய வேண்டும் என்று விரும்பியது. அதற்கான வேலைகளையே அது செய்தது.
இந்த நிலையில் தம்மை நிலைப்படுத்தி வெற்றிகொண்டவர்கள் விடுதலை புலிகள் அமைப்பாக இருந்தது. குறித்த நிலையில் இருந்த சில தலைவர்கள் விலைபோனார்கள்...துரோகியானார்கள்..தம்மை நம்பி வந்த போராளிகளை நட்டாற்றில் விட்டுவிட்டு புலியெதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டு தமிழரிடையே பிரிவினையை உருவாக்கி எமது ஒற்றுமைக்கும் நியாயமான அரசியல் தீர்வுக்குக்கும் முட்டுக்கட்டையாக இன்றுவரை இருந்து வருகின்றனர்.
எமது அபிலாசைகளை பற்றி பேசி ஒற்றுமையாக செயற்படவேண்டிய காலத்தில் தவறான இளைய சமுதாயத்தை உருவாக்குவதில் முன்னணி பெற்று விளங்குகின்றார்கள்...
தமிழர்கள் தனிப்பட்ட தலைமையில் கீழுள்ள விசுவாசத்தில் சிந்திக்க தெரியாத மந்தைகளாக வளர்ந்து நிக்கின்றார்கள்....
தெளிவான அரசியல் பார்வையற்ற ஒவ்வொரு நபர்களுக்கும் அவர்களின் எழுத்துக்களுக்கும் ஆமாம் போடும் ஆசாமிகளாக
ஜால்றா போட்டு வாழும் நிலைக்கு பல தமிழர்கள் தள்ளப்பட்டுளார்கள்...
கம்யூனிச கொள்கை கொண்டவர்களில் சிலர் இன்றுவரை தமது கொள்கைக்காக உறுதியுடன் தொடர்ந்து போராடி வருகின்றனர்.''தேசிய கொள்கை''யுடன் பயணிப்பதாக கூறும் நபர்கள் பலர் நிதி தேவைக்காக விடுதலை கட்டமைப்பால் உருவாக்கப்பட்டு சம்பளத்துக்கு வேலை செய்த நபர்கள் என்பதை மக்களுக்கு தெரிவிக்காமல் அவர்களே மக்களுக்கு தெரிந்த முகம்களாக இருந்ததை சாதகமாக வைத்துக்கொண்டு மக்களை பிழையான பாதையில் வழிநடத்த முனைகின்றார்கள். ''தேசிய சக்திகள்'' தாமென்று கூறிக்கொண்டு பிரிவினைவாத அரசியலை முன்னெடுத்து செல்வதில் இவர்களின் பங்கும் முக்கிய இடத்தை பெற்று நிற்கின்றது.
ஊடகவியலாளர்கள் என்று கூறும் பலரும் தமது வயிற்று பிழைப்புக்கும், புகழை பெற்றுவிடவேண்டும் என்றும் எண்ணுவதால் நீதியான ஊடகதர்மமற்று வாழ்வதை குறியியலாக கொண்டுள்ளனர்.
ஆக சிறந்த அறிவும் நேரிய பார்வையும் சரியான வழிநடத்தல் திறனும் இப்போது அவசியமான ஒன்றாகும்.
காவியா
14/05/19
1.23
லண்டன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக