புதன், 15 மே, 2019

எங்கள் சாபம் தாக்கும் உங்களை

ஐயோ அம்மா
ஐயோ கடவுளே
அம்மா என்னை விட்டு போயிட்டியா
அப்பா கடவுளே ஐயோ என்று
கத்திய கூக்குரல்களும் 
பிஞ்சுகளின் கதறல்களும்
உங்கள் காதுகளுக்குள்
ஒலிக்கவில்லையா??
ஒன்றா இரண்டா
ஒரு மாதமா இரண்டுமாதமா
கண்ணீர் விட்டு கதறி அழுது
தலையும் உடலும்
வேறாகி பிணக்குவியல்களாய்
தெருவோரம் கிடந்த
அந்த மனிதர்கள் யார்?
உங்கள் மொழிபேசிய
அப்பாவி தமிழர்கள்
கொத்து கொத்தாய்
கொன்றும் உங்கள் மனங்கள்
இரக்கமின்றி பாலும்
சோறும் உண்டு
கூடி கழித்து கொண்டாடினீர்கள்
இன்று முஸ்லீம்களை
அழித்து உங்கள் நாடென்று
பேருவகை கொள்கின்கிறீர்கள்
உங்களுக்கு இன்று
ஒன்றினை சொல்லிக்கொள்கின்றோம்
நீங்கள் பௌத்த சிங்கள வெறிகொண்டு
ஒவ்வொரு இன மக்களையும்
அழித்து இன்பம் கொள்ளுங்கள்
நாளை சீனாக்காரனும்
அமெரிக்கனும் ரஷ்யனும்
பிரித்தானியனும் உங்கள்
இளவம்சங்களை சூறையாடி கொள்வார்கள்
அப்போது நீங்கள் கெஞ்சி கேட்டு
மன்றாடினாலும் உங்கள் அரசியல்வாதிகள்
உங்களை காப்பாற்றிட போவதில்லை
மனிதத்தை/ அன்பை போதித்த
புத்தனின் வழிவந்தவர்களே
சிந்தியுங்கள். நீங்கள் சக
மனிதர்களுக்காக சிந்திக்கும்
காலமிது.
காவியா
2.11
லண்டன்
14/05/19

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக