புதன், 15 மே, 2019

நாடுகடந்த தமிழீழதேர்தல் முடிவும் தமிழ்மக்களும்

''எம் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இருந்து விலகி எம் மக்களை சமூக வலைத்தளங்கள்தான் காப்பாற்ற வேண்டும்'' என்று ஆழமாக கூறிடலாம். இரு வேறுபட்ட கொள்கைகளை கொண்டவர்கள் பிரித்தானிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் உள்நுழைந்து இருப்பது நாடுகடந்த அரசாங்கத்தின் இஸ்தீரன கொள்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது. தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே கூட்டங்கள் கூட்டங்களாகி தமக்கு ஆதரவானவர்களுடன் சேர்ந்து மற்றவர்களை பற்றி தமக்கு தெரிந்த அறிவில் பேசிக்கொண்ட நிலையை பார்க்கும்போது இவர்கள் ஒரு அரசாங்கத்தை கொண்டுநடத்தக்கூடிய ஆற்றல் கொண்டவர்களா? என்ற கேள்விக்குறி உருவானதை தடுக்க முடியவில்லை.
''ஆனாலும் இளைஞர்களின் கையிலேயே தான் எதிர்காலம் என்ற கருத்து ஆழமாக நம்பப்படுவதால் இவர்களை நம்பிடவேண்டிய சூழலில் மக்கள் வாழ்கின்றனர்''.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின் அவர்கள் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள்
1)நாடுகடந்த தமிழீழ பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நிறத்திலான உடையினை அணிந்திட வேண்டும் . அவர்கள் நாடுகடந்த அரசாங்கம் சார்பான நிகழ்வுகளில் பங்குபற்றும்போது குறித்த ஆடைகள் அவர்களை தனித்தவர்களாக காட்டிடும்.
2)பொது இடங்களில் மதுவருந்துதல்/ காதில் தோடு அணிந்து உலாவருதல்/ வதந்தி பேசுதல்/ தவறான வார்த்தை பிரயோகங்களை தவிர்க்க கற்றிட வேண்டும்
3)மக்களின் பிரச்சனையை கேட்பதற்கு என்று வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கி மக்களை நேரடியாக சென்று மக்களுடன் பேசிட வேண்டும்.
4)18 பாராளுமன்ற உறுப்பினர்களும் சுழற்சி அடிப்படையில் இங்கிலாந்தில் உள்ள அனைத்து பிரதேசங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளிலும் சமூகமளித்து தமது எதிர்கால திட்டத்தை பற்றிய தெளிவினை வழங்கிட வேண்டும்
5)சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வாத பிரிதிவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்
6)சிறந்த கல்வியாளர்களை உள்வாங்கி அர்ப்பணிப்புள்ள காமினிஸ்ட் ஆளுமைகளை உள்ளெடுத்து குறித்த நாட்டில் இயங்கும் நாடுகடந்த அரசாங்கத்தின் மாதாந்த செயற்பாட்டினை கண்காணிக்க ஏற்பாடு செய்திட வேண்டும். குறித்த ஆளுமைகள் நாடுகடந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த வகையிலும் தொடர்பற்ற நபர்களாக இருக்க வேண்டும்.
7) ஒவ்வொரு நாடுகடந்த பாராளுமன்ற உறுப்பினர்களினதும் செயற்பாடுகள் எழுத்து மூலமாக ஒவ்வொரு மாதமும் நாடுகடந்த அரசாங்கத்தின் மாதாந்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
8)நாடுகடந்த மாதாந்த கூட்டத்தின் நிகழ்வுக்கு நடுநிலையான ஊடகவியலாளர்களை அழைத்து மாதாந்த செயற்பாடுகள் பற்றிய விளக்கங்களை கொடுக்க வேண்டும்.
9)மாதாந்த கூட்டத்தில் நாடுகடந்த அரசாங்க உறுப்பினர்கள் எவ்வாறான நிதியினை பெற்றுக்கொண்டார்கள் என்ற கணக்கறிக்கை சரிசெய்யப்பட்டு நாடுகடந்த அரசாங்கத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தொகையை வழங்க வேண்டும்.
10)எத்தகைய ஆர்பாட்டங்களில் நாடுகடந்த அரசாங்கம் பங்குபற்றும் என்ற தெளிவான அறிக்கையை முதலாவது கூட்டத்தில் தயாரிக்க வேண்டும்.
11) நாடுகடந்த அரசாங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் வரவழைத்து அவர்களின் நிலையினை தெளிவாக கேட்டறிந்து அங்கத்தவரின் எண்ணிக்கையின் அடிப்படையில் 20 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சம அளவிலான அங்கத்தவர்களை பிரித்து வழங்கி குறித்த அங்கத்தவர்களின் தேவைப்பாடுகள் நிறைவேற்றப்பட வேண்டும்
12)பாராளுமன்ற உறுப்பினர்களால் நாடுகடந்த அரசாங்கத்தில் உள்ள அங்கத்தவர்களுக்கு சலுகை வழங்கும் நிலை முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.
13)பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் நாட்டு அரசியல்/உலக அரசியல்/ எதிர்கால திட்டமிடல்கள்/ ஆங்கில வேற்று மொழிகளை கற்பிக்கும் வகுப்புகளை உருவாக்க வேண்டும்.
14)மக்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் கணம் பண்ணும் அதேவேளை மக்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கணம் பண்ண நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு காரணமாக இருக்க வேண்டும் .
15)நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாயில் இருந்து உதிரவிடும் சொற்களை மிக அவதானமாக உதிர விடவேண்டும்.
16)மாலைகள், மேடைகள் கிடைத்துவிட்டால் தன்னிலை மறந்து வார்த்தைவிடும் சம்பவங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் .
17)நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பணிசெய்ய மக்களால் நியமனம் பெற்றவர்கள் என்பதை மனதில் கொண்டு செயற்படும் அதேவேளை தேவையற்ற தொந்தரவுகளை மக்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளுக்கு கொடுக்க கூடாது.
18)எந்தவொரு அரசியல்கட்சிக்கும் சார்பாக தமது நிலைப்பாட்டினை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டிருக்க கூடாது.
19) நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆக குறைந்தது 3 மொழியினை கற்றுக்கொண்டு சரளமாக உரையாடக்கூடியவர்களாக இருக்க வேண்டும். (இப்போது தகமையற்று இருந்தாலும் குறித்த காலப்பகுதியில் தகைமையை உயர்த்திட தவறின் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகிட வேண்டும்)
20)தமிழ்மக்களுக்கான அரசாங்கம் என்பது உலக நாடுகளின் உள்ள அரசாங்கத்துடன் ஜனநாயக ரீதியிலான நகர்வுகளை முன்னெடுக்க உருவாகிய அமைப்பே தவிர பக்கத்து வீட்டு நபர்களுடன் வேலி சண்டை போட உருவாகிய அமைப்பு இல்லை என்பதை குறித்த ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆழமாக உணர வேண்டும்.
21) நாடுகடந்த அரசாங்கத்தில் நிகழும் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கிடையிலான பிணக்குகளை/ முறுகல் நிலையினை பொதுவெளிக்கு கொண்டுவந்து மக்களுக்கு தெரியப்படுத்தி ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களை பற்றி தவறாக பேசுவதை/ வதந்திகளை பரப்ப விடுவதை முற்றாக தவிக்க வேண்டும்.
22)எந்தவொரு பெண்ணுடன்/ஆணுடன் பேசும்போது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி அங்கத்தவர்களும் சரி நேர்த்தியான ஒரு இடைவெளிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும்.
23)நாடுகடந்த தமிழீழ கூட்டத்தொடர்களில் மதுபான விநியோகம்/ மது அருந்துதல் முற்றாக களையப்பட வேண்டும்.
24)தமிழீழம் என்ற பெயர்பதித்த கூட்டங்களில் குறித்த நடைமுறை மிகவும் இறுக்கமாக பேணப்பட வேண்டும்...
குறிப்பு
நேற்றைய நிகழ்வில் பிரித்தானிய கொடியை பக்கம் மாற்றி கட்டிய நபர்களை மிகவும் வன்மையாக கண்டிப்பதுடன் எமது தேசியக் கொடி எதுவென்று சரியாக தெரியாத நபர்களை ஆழ்ந்த கோபத்துடன் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்.
தேசியம் பேச்சில் மட்டும் இருக்க கூடாது, அது இரத்தத்தில் ஆழமாக புதையோடி புத்தியில் வழிந்தோட வேண்டும்.
இனிவரும் காலத்தில் குறித்த தவறுகளை களைந்து மக்கள் போற்றும்/ வாழ்த்தும் நாடுகடந்த அரசாங்கத்தை கொண்டு நடத்திட மனதார வேண்டுகின்றோம்.
குறித்த இந்த பதிவை எல்லோரும் வாசிக்காவிடினும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் எனது முகவலையில் இருக்கின்றீர்கள். நீங்கள் வாசித்து உங்களின் சக உறுப்பினர்களுக்கு அனுப்பி வையுங்கள்.
காவியா
11/05/19
8.58
லண்டன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக