ஞாயிறு, 14 ஜூலை, 2019

சுமந்திரன் ஐயாவும் கஜேந்திரன் அண்ணாவும்

சுமந்திரன் ஐயா
ரணில் விக்கிரம சிங்க ஐயா நம்பும் முக்கியமான நபர். தனது அமைச்சர்கள் அனைவரையும் விட சுமந்திரன் ஐயா மீது ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளார் ரணில் ஐயா. அந்த பிணைப்பை நாம் தகர்க்க முடியாது. காலம் காலமான ஐக்கிய தேசிய கட்சியின் தீவிர விசுவாசிகளாக சுமந்திரன் ஐயா குடும்பம் இருந்து வருகின்றது.
எந்த அமைச்சரை எங்கே எப்போது நியமிக்க வேண்டும் என்று புரையோடி திரியும் சக்திகளை சாணக்கியமாக வெல்லும் தந்திரம் தெரிந்தவர் சுமந்திரன் ஐயா. ஆகவே சுமந்திரன் ஐயாவை நாம் நம்புவதும் அவர் நிச்சயம் எமக்கு விசுவாசியானவர் என்று நம்புவதும் எமது முட்டாள்தனமே.
சுமந்திரன் ஐயாவின் விசுவாசம் நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சிக்கே இருக்கும்.  சுமந்திரன் ஐயாவை நாம் விமர்சிப்பது தவறே. அவர் தான் எங்கே வளர்க்கப்பட்டு உருவாக்கபட்டாரோ அவர்களுக்கு விசுவாசமான நிலையில் இருக்கின்றார்.

இப்போது கஜேந்திரன் அண்ணாவை எடுத்தால் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டவர் தனது முக்கிய அங்கத்தவர்களுக்கு தமிழ்த்தேசிய கூட்டணி ஆசனம்(பத்மினி,செயலாளர் கஜேந்திரன்)  ஒதுக்கவில்லை என்ற காரணத்தால் குறித்த கட்சியிடம் இருந்து விலகி இலங்கை தமிழ் காங்கிரசு என்ற தந்தையின் கட்சி பெயரில் போட்டியிடாமல் ஈழ மக்களின் வாக்குகளை இலக்குவைத்து தேசியத்தை வாக்கு வங்கியின் முதலாக பாவித்து தேசிய விடுதலை கூட்டணி என்று புதியதொரு கட்சியை உருவாக்கி 2010 , 2015 தேர்தலைகளை எதிர்நோக்கினார்.
இவர்களது நோக்கம்
 தமிழ் மக்களுக்கு நல்லதொரு செயற்பாடு செய்யவேண்டும் என்ற கொள்கையிலும் தம்மை சார்ந்தவர்களுக்கு நல்லதொரு பதவியும் அவர்களை சுகமாக வாழவைக்கவேண்டும் என்ற கொள்கையுமே புரையோடி உள்ளது. இவர்களும் சுயநல அரசியலுக்காக விடுதலை போராட்டத்தை தமது முதலாக பயன்படுத்துகின்றார்கள்.

புலம்பெயர் தேசத்தில் எவ்வாறு நாம் அண்ணாவின் ஆட்கள் என்றும் நாம் அண்ணியின் ஆட்கள் என்றும் கூறி பிரித்தாளும் சக்திகளும் விலைபோன சக்திகளும் உருவானதோ அவ்வாறே ஈழத்திலும் 2009 ஆம் ஆண்டின் பின்னர் விடுதலை போராட்டத்தின் அரசியல் கொள்கையை நாம் பின்பற்றுகின்றோம் என்று கூறிக்கொண்டு சுயநல அரசியலை பலரும் நகர்த்துகின்றார்கள்.

பொது மன்னிப்பு வழங்கிய பிரேமச்சந்திரனுடன் இணையவேண்டாம் என்றும் அதனால் தான் விக்கி ஐயாவுடன் இணைய போவதில்லை என்றும் மக்களை ஏமாற்றும் அரசியலும் கஜேந்திர குமார் அண்ணாவின் நோக்கமாக இருக்கிறது. இவரது நோக்கமும் பிரித்தாளும் அரசியலே

ஒப்பீட்டு நோக்கில் சுமந்திரன் ஐயா ஐக்கிய தேசிய கட் சி விசுவாசியாக இன்னுமொரு டக்ளஸ் ஐயா போன்றவரே
அதேபோன்று கஜேந்திரன் அண்ணா இன்னுமொரு கருணா அம்மான் போன்றவரே ...

எமக்கு தேவை எம் மக்களின் வாக்குகளை எந்த நிலையிலும் பிரிக்க கூடாது என்பதே ...

-அனலில் ஒரு குளிர்மை-  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக