புதன், 4 செப்டம்பர், 2019

விக்கி ஐயாமீது குற்றம் சொல்லும் அல்லது அவரை தவறாக சித்தரிக்க முனையும் அனைவரிடமும் ஒரு கேள்வி ?

விக்கி ஐயாமீது குற்றம் சொல்லும் அல்லது அவரை தவறாக சித்தரிக்க முனையும் அனைவரிடமும் ஒரு கேள்வி ??
இலங்கை நீதிமன்றம் சரியான விடயங்களை ஆதாரமாக எடுத்து தான் செயற்படும் என்று நம்புகின்றீர்களா ?/
அப்படி நீங்கள் நம்பும் இடத்தில
உங்களுக்கு எதற்கு சுதந்திரம் இல்லை என்று யாரும் போராட வேண்டும்? /எமக்கு கொள்கை முக்கியம் என்று நீங்கள் போராட வேண்டும் ..அதாவது கஜேந்திரன் அண்ணாவை சொன்னேன் ///
ஆழமாக சிந்தித்தால் எங்கே தப்பு உண்டு என்று தோன்றவில்லையா??
ஒரு நாட்டின் நீதித்துறை சரியாக இயங்குமானால் அந்த நாடு தனிமனித சுதந்திரத்தை மதிக்கும் நாடு என்றே பொருள் ...
இலங்கை நீதிமன்றம் விக்கி ஐயாவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியதை நீங்கள் சரி என்று வாதிப்பீர்களாக இருந்தால் உங்களுக்கு தனிமனித சுதந்திரம் உண்டென்று நீங்கள் கூறுகின் றீர்கள் என்றே பொருள்
அப்படியாயின்
கஜேந்திரன் அண்ணா சொல்லும் கொள்கைக்கும் அரசியலும் ஈழத்தில் வேலை என்ன ??
ஒன்றுடன் ஒன்று எல்லாமே முரணாக தெரியவில்லையா ?/இல்லை ஆழமாக சிந்திக்க தோன்றவில்லையா ???
விக்கி ஐயா பற்றி பலரும் அறியாத அல்லது வெளியில் சொல்லாத விடயங்களை தேடி நாம் பயணிக்க வேண்டும் ...
யார் இந்த விக்கி ஐயா ??
பலருக்கு விக்கி ஐயா சிங்கள பிரதேசத்தில் வாழ்ந்த மனிதர் என்பதும் வாசுதேவ நாணயக்கார என்பவரின் சம்பந்தி என்பதும் மட்டுமே தெரியும் ...அதனை வைத்தே பலர் ஐயாவை எதிரியாக்கி அரசியல் செய்கின்றார்கள் ...
உங்கள் அனைவருக்கும் நாம் ஒன்றை கூறுகின்றோம்
உண்மை என்றும் உறங்காது
ஆனால் சிலநேரத்தில் மௌனமாக இருக்கும் .
காலத்தின் தேவையில் அது நிச்சயம் வெளிவந்தே தீரும் .
ஏனெனில் எம் மேதகுவின் கனவும் எம் மாவீரர் செல்வங்களின் கனவும் எமது ஈழத்தின் மீதான அதிதீவிர பற்றுதலும் எமது எழுத்தின் வேகமும் வீச்சும் விலைபேசி வாங்கிட முடியாத நிலையும் உண்மைகளை வெளிக்கொண்டு ..வரும்
எமது முகம் பார்க்கவேண்டும் என்று கூறி எம்மை அழிக்க நினைக்க வேண்டாம் நாம் இறந்தாலும் எழுந்து வருவோம்
காவியா
04/09/19
16.30
லண்டன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக