உண்மை எழுதினால் எம்மை அரச புலனாய்வு என்று கூறுகின்றார்கள். நான் தெரியாமலே கேட்கின்றேன்.
அரச புலனாய்வாக செயற்பட இங்கே என்ன வேலை உண்டு சொல்லுங்கள்.? ''கதவை திறவாதே வெளியில் பேய் இருக்கிறது'' என்று சின்னப் பிள்ளைகளை வெருட்டுவது போல நீதியை எழுதும் நபர்களை இந்திய புலனாய்வு /அரச புலனாய்வு என்று கூறும் விடயம் யாரால் கற்பிக்கப்பட்டு இருக்கிறது ?
இந்தியாவிற்கும்/ சிறிலங்காவிற்கும் இப்போது எல்லா தரவும் எமது கட்டமைப்பை பற்றித் தெரியும். அதற்கு காரணம் விடுதலை போராட்டத்தின் மௌனிப்பிற்கு முன்னரே துரோகிகளாக மாறியவர்களே அனைத்துவிதமான தரவுகளையும் வழங்கி முழுமையான விடயங்களை சமர்ப்பித்து இருக்கின்றார்கள்.
அதனை வைத்தே எமது போராட்டம் வெற்றிகரமாக மௌனிக்கப்பட்டது.
எமது மதிப்பிற்குரிய மேதகு இந்திய/ ஈழ முறுகல் நிலையின்போது மண்ணெண்ணெய் கையில் ஏந்தியபடி திரிந்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தாம் தம்மீது ஊற்றி எரிந்திடவிட வேண்டும் என்று...
ஆனால் அந்த முடிவினை மாற்றி தன்மீதே குண்டை வெடிக்கச்செய்து தனது உடலம் சிங்கள இராணுவத்திடம் சிக்க வேண்டும் என்று கூறிய மிகப்பெரிய போராளி.
என் உடலம் சிக்காவிடில் எம் மக்களை இன்னும் துன்பம் செய்யும் இலங்கை அரச படையும் /மற்றைய நாடுகளும் என்று கூறிய ''மக்கள் மீது சொல்லில் அடங்காத பாசம் கொண்ட எங்கள் மேதகு'' ...
இப்போதும் அண்ணா வரும் என்று கூறி அரசியல் செய்யும் சில விலாங்கு கூட்டம் ஒன்றை தெளிவாக புரிய வேண்டும் ?
எமது மேதகு இருக்கின்றார் என்று கூறுவதால் யாருக்கு நன்மையுண்டு??? ...
எம் மக்களை இன்னும் முடக்கவும்/ விடுதலை புலிகள் வாறார்கள்/பயங்கரவாதம் நடக்கபோகின்றது என்று கூறுவதும் யாருக்கு நன்மையாக முடியும் ??/
ஆகவே மதிப்பானவர்களே எம் மக்களே!
இன்று எமக்கு முன்னால் காலம் இட்ட பணியில் எம் மேதகு இறந்துவிட்டார் என்று சட்டரீதியாக நிரூபணம் செய்து அந்த அமைப்பில் கூறிய குற்றங்களை செல்லுபடியாததாக்கி எம் மக்களுக்கான பூரணமான விடிவை பெற்றிட வேண்டும் . இதுவே எமக்கு இன்று காலம் அளித்துள்ள கட்டளை.
புலம்பெயர் தேசத்தில் /ஈழத்தில் மதிப்புள்ள மக்கள் அந்தந்த நாட்டு பாராளுமன்றத்தில் உள்நுழைய வேண்டும். எமது மேன்மையான பேருடனேயெ அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு எமது அண்ணா எமது விருப்பமான கட்டமைப்பு உருவாக்கிய பெயரில் ஒவ்வொரு நாட்டிலும் எமது இளைய சமுதாயம் அந்தந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்று அந்ததந்த நாட்டு பாராளுமன்றத்தில் வீரியமிக்க சக்தியாக மாற வேண்டும் .
அதுவே எமக்கான விடிவினை பூரணமாக பெற்றுத்தரும் .அதனை விடுத்து நீ இந்திய றோ / நான் அரச புலனாய்வு என்று குழந்தைப்பிள்ளை கதையை சொல்ல வேண்டாம்.
எம் சத்திய தீயில் வெந்திடும் போதும் என் எழுத்தின் வேகம் குறையாது , நாளை செத்து நான் போகலாம் என் கனவுகள் என்றும் கலையாது .
எம் மேதகுவின் மாவீரர் நாள் உரையையும் அவரது சிந்தனை துளியையும் கேட்டு வளர்ந்த புலம்பெயர் பறவை ....
என்றும் அன்புடன்
காவியா
06/09/19
7.47
லண்டன்

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக