செவ்வாய், 17 செப்டம்பர், 2019

நாம் மேதகுவை அவரது கட்டமைப்பை ஆழமாக நேசிக்க காரணம் என்ன

எமது போராட்டம் ஈழம் என்ற குறுகிய நிலத்தில் இருந்ததை இன்று பரந்த உலகிற்கு கொண்டு சென்று ஈழ விடிவிற்காக தீர்வை தெளிவாக கூறியிருக்கின்றார் .அதனால் மேதகுவை அவரது கட்டமைப்பை பிடிக்கும் .
ஈழ அரசியல்வாதிகளை பிடிக்கவே பிடிக்காது ..காரணம் மக்களின் நலனில் அக்கறை கொள்ளாது எமது மேதகுவின் பெயரையும் அவரது கட்டமைப்பையும் தமது நலனுக்காக பயன்படுத்துவது .
விக்கி ஐயாவை பிடிக்க காரணம்
எமது கட்டமைப்பை சில இடங்களில் விமர்சித்தும் இருக்கின்றார்.அதேபோல மக்களின் நலனை ஆழமாக நேசிக்கின்றார் .
விக்கி அய்யாவில் இதுவரை பிடிக்காமல் இருந்தது
நிர்வாக கட்டமைப்பில் சரியான நபர்களை போடாமல் விட்டது . இனி அந்த தவறு நடக்காமல் இருக்க வேண்டும் .
எமது நோக்கம் என்ன ? நாம் யார் ?
ஈழம் சுதந்திரம் பெற்றதில் இருந்து அரசியல் ரீதியாக போராடி வெற்றி காண முடியாத போது எமது முந்திய சமுதாயம் ஆயுதத்தை கையிலெடுத்து போராடியது. .ஆயுதத்தை கையிலெடுத்து போராடியதால் எமது இனம் உலகம் எங்கும் பரந்து அகதியாகியது.அகதியாகிய பலரில் எமது போராட்டத்தை தமது நலனுக்காக பயன்படுத்திய சுயநல நபர்களும் உருவாகினார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும் .எமது கட்டமைப்பின் பெயரை சொல்லி அரசியல் பேசும் சுயநல அரசியல்வாதிகளுக்கும் .அந்த போராட்டம் மௌனமாகிய காலத்தின் பின்னர் தாமே விடுதலைப்புலிகளின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு ஈழ அரசியலை தமது பிடிக்குள் வைத்து கொண்டார்கள் .
18 வைகாசி 2009 ஆம் ஆண்டு விடுதலை போராட்டத்தில் இருந்து புலத்தை நோக்கி எப்படியான நபர்கள் வெளியேறினார்கள் என்பதை இங்கே நாம் கவனிக்க வேண்டும் .
1)விடுதலை புலிகளின் கட்டமைப்பில் பெரிய தளபதியாக இருந்தவர்கள் துரோகிகளாக மாறி காட்டிக்கொடுத்து தாம் பிழைக்க தம்மை நம்பி நின்றவர்களை நட்டாற்றில் விட்டு விட்டு வெளியேறியவர்கள்
2)தமது குழந்தை தமது மனைவி என்று எண்ணிக்கொண்டு கையில் கிடைத்த பணத்தை மறைத்து விட்டு தப்பி ஓடியவர்கள்
3)துரோகியாக மாறிய கருணாவின் கைக்கூலிகள்
4) தம்மோடு தோளோடு தோள்நின்று போராடிய நண்பர்களை போராட அர்பணித்துவிட்டு அவர்களுக்கு கைகாட்டி விடைகொடுத்த உன்னத போராளிகள்
மேற்கூறிய நபர்களில் முதல் மூன்று வகை நபர்களும் சிங்கள அரசியல்வாதிகளுக்கு தொல்லையாக இருக்கவில்லை .அவர்கள் சிங்கள அரசியல்வாதியின் எச்சிலை வாங்கி உண்டுகொன்டு இருந்தார்கள் .குறித்த இந்த நபர்களே புலம்பெயர்ந்த நபர்களில் ஒப்பீட்டு அளவில் அதிகமாகவும் காணப்பட்டார்கள். முதல் கூறிய மூன்று வகையினர் எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததாலும் போலி தேசியவாதிகளை ஈழத்திலும் /புலத்திலும் கடந்த 10 வருடத்தில் உருவாக்கி இருந்தார்கள் .வதந்தி /பொய் /போட்டி /பொறாமை /மனிதநேயமற்ற பண்பு / போலி வர்த்தக நாட்டம் இவற்றில் மேற்குறித்த நபர்கள் ஈடுபட்டு வணிகத்தை பெருக்கி பணக்காரர்களாக மாறியதுடன் பணத்தை வைத்து உலகையே கட்டிப்போட எண்ணிக்கொண்டார்கள் .
நான்காவது வகையில் இருந்து வந்தவர்கள் மாவீரர்களை மனதுக்குள் சுமந்தபடி அவர்களின் எண்ணத்தை மறக்காமல் தமக்கான மேலெழு சக்தியை தேடிக்கொண்டே இருந்தார்கள் .
மேலெழு சக்திக்காக போராடியவர்களை ஒருங்கிணைப்பது மிகவும் கடினமாகவும் எண்ணிக்கையில் குறைந்து இருந்ததால் தேடி எடுப்பது மிகவும் இடைஞ்சலாகவும் இருந்து வந்தது .
மாவீரர்களின் சுயநலமற்ற மரணமும் எமது மேதகுவின் ஆழமான பற்றுதியும் மிக எண்ணிக்கையில் குறைந்தவர்களை ஒன்றிணைத்து மக்களின் விடிவிற்காக போராட தூண்டியது .உண்மையான விடுதலை வேட்கை கொண்ட உன்னத போராட்ட குணத்தின் முன்னால் போலிகளின் வேசம் கலைய தொடங்க எண்ணிக்கையில் அதிகளவாக இருக்கும் நபர்கள் இப்போது வதந்திகளை பரப்பும் செயற்பாட்டில் ஈடுபட ஆரம்பித்து உள்ளார்கள் .
இதுவே மக்கள் பேரவை மீதான தாக்குதலாக மாறியுள்ளது .இதில் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய சில விடயம் உண்டு .சிறந்த நீதியரசர் என்ற நிலையில் உள்ள ஐயா சிறந்த நிர்வாக திறன் கொண்டவராக இருக்கவில்லை .அவரும் குறித்த பிரச்சனையின் ஆழம் அறியாமல் சில இடங்களில் தவறி இருக்கின்றார் .ஆனால் ஒப்பீட்டளவில் இருக்கும் அரசியல்வாதிகளுக்குள் சுயநமற்று தமது எல்லை காலத்திற்குள் எம் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று போராடும் அந்த மனிதரை நாம் நம்புவதற்கு மிக மிக ஆழமான காரணம் உண்டு .குறித்த அந்த காரணத்தை நாம் யாருக்கும் எம் மரணத்திலும் கூறவும் போவதில்லை .ஆகவே எமது நீதியான செயற்பாட்டிற்கு எமது இளைய சமுதாயம் ஆதரவு கரம் தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம் .
நாம் இன்று பிரிவுற்று நிற்பது எமது போராட்டத்தை ஆழமாக நேசித்து மரணத்தை தழுவிய மாவீர தெய்வங்களுக்கு செய்யும் துரோகமாகும் .எம்மால் முடிந்தவான விழிப்புணர்வு செய்திகளை கொண்டு செல்வதும் முடிந்தளவில் விழிப்புணர்வு செய்வதும் எமது நோக்கமாகும் .
இன்று நிகழ்வது அறிவு தேடல் யுத்தம்.இதில் வெற்றி பெற்றவர்கள் சுதந்திர காற்றை சுவாசிப்பது நிச்சயம் நிகழும். ஏனெனில் மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மாவீரர்களின் கனவு என்றும் பொய்ப்பதில்லை .ஆகவே அறிவை தேடுங்கள்.உங்கள் தலைவர்களிடம் நீங்களே கேள்விகளை கேளுங்கள் ,ஈழத்தின் அரசியல் எப்படியாக இருந்தது ??சமூகத்தில் பண்பட்ட மனிதர்களே அன்று அரசியல் பேசினார்கள் எழுதினார்கள் .மற்றவர்கள் அவர்களை பின்பற்றி சென்றார்கள் .ஆனால் இன்றைய நிலையில் எல்லோரும் தமக்கு தெரிந்தவற்றை எழுதி தவறாக செய்தியை பரப்புகின்றார்கள் ...
இறுதியாக மண்ணின் மீதும் மக்களின் மீதும் தீராத பற்று கொண்ட எமது இளையவர்களே மக்களே சமூக எழுத்தாளர்களே !
எம் மக்களுக்காக ஒரு கூரையில் கீழ் இணையுங்கள் .யாரில் எல்லாம் தவறு உண்டோ அவர்களை தவறுக்கு ஏற்ப விலக்கி பயணிப்போம் .
என்றும் அன்புடன்
காவியா
8.39
11/09/19
லண்டன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக