செவ்வாய், 17 செப்டம்பர், 2019

முகவலை விளையாட்டு பொம்மையா ?

ஆயிரம் தடவை நாம் படித்து படித்து சொல்லி எழுதினாலும்
காத்தான்குடி முஸ்லீம் முகவரிடம் காசை கொடுத்துவிட்டு ஏமாந்து போகும் கிழக்கு மாகாண வறிய மக்களை நினைக்கும்போது கண்ணீர்தான் வருகின்றது.
சுற்றுலா விசாவில் எந்த நாட்டிக்கு சென்றாலும் நீங்கள் வேலை செய்ய முடியாது. சம்பளமும் யாரும் உங்களுக்கு தர மாட்டார்கள்..புரிந்து கொள்ளுங்கள் எமதருமை சகோதர சகோதரிகளே ....
காத்தான்குடி முஸ்லீம் முகவரிடம் 20 பேர் ஆளுக்கு 2 இலட்சம் படி கொடுத்து துபாய்க்கு சென்று அங்கே விசா முடிந்தவுடன் பலர் அல்லப்பட்டு திரும்பியதும் ஒருவர் வேறு நாட்டுக்கு சென்று போலீசில் பிடிபட்டு இருப்பதும் எதனால் ??....//////
பெரிய பிரித்தானியாவை பொறுத்தவரை வேலைவாய்ப்பிற்கான வசதிகள் உண்டு. குறிப்பாக மருத்துவ துறைசார் வேலைவாய்ப்புகளும் /தாதியர் தொழிலும்/ தொழிநுட்ப தொழிலும் அதிகமாக இருக்கிறது. இந்த தொழிவாய்ப்புகளை பெறுவதாயின் ஆங்கில அறிவு மிகவும் அதிகமாக இருக்க வேண்டும். ஐஎல்டிஎஸ் என்ற பரீட்சையில் நீங்கள் 7/10 ளுக்கு புள்ளிகள் எடுக்க வேண்டும்.
குறித்த முறையின் அடிப்படையில் மட்டுமே நீங்கள் வேலை வாய்ப்பிற்காக பெரியபிரித்தானியாவிற்கு வர முடியும்.
நீங்களே நேரடியாக பிரித்தானிய வெளிநாட்டு தூதரகத்திற்கு சென்று நேர்முக பரீட்சையில் வெற்றிபெற வேண்டும் .
சுற்றுலா விசாவில் வந்து இங்கே நேரடியாக வேலை செய்ய முடியும் என்பது சட்டத்திற்கு ஏற்பானது அல்ல. அதேபோன்று மாணவர் விசாவில் இங்கே வந்து ஆக கூடியதாக சட்டப்படி 8 மணித்தியாலங்கள் மட்டுமே நீங்கள் வாரத்திற்கு வேலை செய்ய முடியும். அதற்கு மேலதிகமாக நீங்கள் வேலை செய்தால் உங்களின் சட்டத்திற்கு முரணாக ஈடுபட்டதாக கூறி உங்களின் மாணவர் விசாவை இல்லாமல் செய்யும் சட்டமும் உண்டு .
இன்றைய காலத்தில் புலம்பெயர் நாட்டிற்கு வருவதென்பதும் அங்கே பணம் உழைக்க முடியும் என்று எண்ணுவதும் மிகவும் தவறான சிந்தனை என்பேன் .அதனை விடுத்து எமது நாட்டில் ஈழ தேசத்தில் மனித உழைப்பை சரியாக பயன்படுத்தினால் மிகவும் மேன்மையான வாழ்வுண்டு என்பேன் .அளவுக்கு அதிகமான ஆசைகளை மனதில் தேக்கி கற்பனை உலகில் சஞ்சரிக்காமல் இருக்கும் வளங்களை கொண்டு மேலான வாழ்வினையும் அன்பையும் இணைத்து வாழ்வதே மனித அழகியல் என்பேன் ...
காவியா
23/07/19
லண்டன்
14.55
முகவலை என்பது பொழுதுபோக்கும் இடமல்ல
அறிவை தேடும் இடம் ..
என்னுடன் பயணிக்கும் யாரும் பொழுதுபோக்கு செய்யும் இடம் முகவலை என்று எண்ணினால் தயவுசெய்து நட்பில் இருந்து விலகி விடுங்கள்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக