செவ்வாய், 17 செப்டம்பர், 2019

விக்கி ஐயா எதனால் முக்கியம் ?

மதிப்பிற்குரிய அனைவருக்கும் !
விக்கி ஐயா அரசியலில் வந்துதான் தனது பெயரை நிலைநிறுத்த வேண்டும் என்ற எந்தவொரு அவசியமும் அவசரமும் இல்லை.
எந்த அரசியல் பின்புலமும் அற்று தாமும் தமது உயர்நீதியரசர் என்ற பொறுப்பும் உலகத்தில் அவருக்கு முழுமையான அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.
தமது ஓய்வு காலத்தில் அமைதியாக இருந்த மனிதரை தமது வசமாக்கி ஆட்டுவிக்கலாம் என்ற சிந்தனையில் சட்டத்தரணிகள் (வழக்கு வெல்லவேண்டும் என்பதற்காக எதையும் மாற்றி மாற்றி பேசுபவர்கள்) நீதியரசரை (வழக்குகளை வாசித்து நீதியாக முடிவெடுப்பவரை )கொண்டுவந்து தமக்கு சார்பாக முடிவு எடுப்பார் என்று எண்ணிய சுயநல மனப்பான்மையில் சிக்காமல் தனியாக நீதியானவர்கள் என்பதை உணர்த்தவர்களுடன் கைகோத்தபோது ஒன்றாக இருக்கும்வரை சரியாக தெரிந்தவர்(கஜேந்திரன் அண்ணா விற்கும் அவரது குழுவிற்கும் )சுயநல அரசியல் நோக்கில் பிரிவினையுடன் வெளிவந்தவுடன் பிழையாக தெரிகின்றார் என்றால்????
நாம் ஒன்றில் ஆழமான பற்றுடன் உள்செல்லும்போது
அது எந்த நிலையிலும் தவறாக தெரியாது .ஈழ மக்களுடன் மக்களாக பழகும் போது ஐயா நிறைய விடயங்களை புரிந்திருப்பார். சிங்கள அரசாங்கத்துடன் தமிழர்களின் பிரதிநிதியாக பேச முற்பட்ட வேளையில் அவர்களின் சுயமுகத்தை அறிந்திருப்பார்.
சிங்கள அரசியல்வாதிகளுடன் குடும்ப உறவாக பேசுவதற்கும் தமிழ்மக்களின் பிரதிநிதியாக பேசுவதற்கும் இருந்த வேறுபாட்டை மிகவும் தெளிவாக அறிந்திருப்பார் .
இந்திய சிங்கள அரசியல்வாதிகளின் கைபொம்மையாக ஐயா இருந்திருந்தால் அய்யாவின் சொத்து இப்போது பலகோடிகளை எட்டியிருக்கும்.
ஆரம்பத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் வரும்போது தேசிய கூட்டமைப்பில் இருந்த (சுமந்திரன் ஐயா , சம்பந்தன்தான் அய்யாவின் நரித்தந்திரங்களை ஐயா உணர்ந்திருக்கவே வாய்ப்பில்லை)
மனிதர்களின் இரட்டை முகத் தன்மையை தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.
இறுதியாக ஈழமும் இலங்கையும் ஒன்றென தெரியாது அரசியலை எழுதும் நுண்ணறிவற்ற அரசியல் சாணக்கியங்களின் முன்னால் அய்யாவின் மரியாதையை குறைக்கும் வார்த்தைகளுக்கு முகம் கொடுத்து இருக்கவும் மாட்டார்.
நரிகளின் திருட்டு அரசியலை இப்போது தான் ஐயா புரிந்திருப்பார் .ஆனாலும் புரிந்த பின்பும் விலகி செல்லாமல்
எமது மக்களுக்கு தன்னால் முடிந்ததொரு தீர்வை எப்படியாவது எடுத்து கொடுத்துவிட வேண்டும் என்பதே .அதை புரியாமல் கண்டபடி கருத்தெழுதும் அரசியல் ஞானமற்ற பலரும் ஒதுங்கி இருங்கள் .
காவியா
8.56
லண்டன்
17.09.19

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக