செவ்வாய், 17 செப்டம்பர், 2019

'எனக்கு யாருமில்லை

''எனக்கு யாருமில்லை'' என்ற எண்ணம் தனிமையில் வாடும் பலருக்கு உண்டு. ''எனக்கு யாருமில்லை'' என்ற சுயநல எண்ணத்தை நாம் கைவிட்டாலே எம்மை சுற்றி ஓராயிரம் உறவுகள் பூக்கும்..அன்பின் தேடல் அழகானது..நம்மை போல எல்லோரும் இருந்தால் மட்டுமே நாம் நேசிப்போம் என்று எண்ண கூடாது. யாரையும் நான் அன்பு செய்வேன் என்ற எண்ணம் தோன்றும்போதே எமது சிந்தனைகள் அழகாகின்றது..
உன்னை நான் நேசிக்க நீ அழகாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை
நீ நல்லவராக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை
நீ பணக்காரனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை
ஆனால் ஒரு உணர்வை புரிந்த மனிதனாக இருக்க வேண்டும்
அழகானவன் நல்லவன் பணக்காரன் என்ற தோற்றங்களை நாம் வாழ்வின் படிநிலையில் பெற்றுகொள்ள முடியும் ஆனால் மற்றவர்களின் உணர்வை புரியும் ஆழமான மனதினை இலகுவாக நாம் பெற்றுகொள்ள முடியாது ...

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக