செவ்வாய், 17 செப்டம்பர், 2019

சிம்பு பாடல் என் வரியில்

Girls::பொண்ணுகளை திட்டி பேசாத
மாமு மச்சி தம்பி
பொண்ணுகளை திட்டி பேசாத
எங்களை கிள்ளி பாக்காதே
மாமு மச்சி தம்பி
எங்களை தூற்றி பாடாதா
நாயி பேயி என்னு திட்டாத
இன்ரநெற்று காலமாச்சு
எல்லாம் இப்போ மாறிபோச்சு
வீட்டுக்குள்ள பொத்தி வச்ச
வீரம் எல்லாம் ஓடி போச்சு
அண்ட வெளியில் போயி கூட
ஆளக்கூடிய சக்தியுண்டு
எங்க காலை தீண்டாதா

Boys::பொண்ணுங்களை திட்டி பேசலை
கண்ணு செல்லம் புச்சி
பொண்ணுங்களை திட்டி பேசலை
உங்களை கிள்ளி பாக்கலை
கண்ணு செல்லம் புச்சி
நீங்க செய்யும் சேட்டை புடிக்கலை
உங்க லூட்டி இன்னும் முடியலை
நேற்று ஒரு லவ்வுதா
இன்று ஒரு லவ்வுதா
ஏமாளி கிடைச்சுபுட்டா
உங்க பாடு ஜாலிதான்
பேட்டி போட்டு செல்பி தான்
எங்க பாடு கில்பிதான்
மாட்டிகிட்ட பம்மிதான்

Boys::நீங்க சொன்ன சொல்ல கேட்டு கேட்டு உங்க படத்த பாத்து சோ க்யுட் சொல்லி
நாங்க இப்போ படும் பாடு அம்மா மா பெரிய பாடுதா
Girls::பிடிச்சிருந்தா நெருங்கி நில்லு பிடிக்காடி வழியை விடு உன்ன போல ஆயிரம்
பேர் வெயிட்டிங் தான் மாமு போ நீ ஆகா ஆகா
Boys::என்ன விட காசு பையன் உங்க கிட்ட மாட்டி கிட்டா என்ன கழட்டி விட்டு போறா
ஏ பெண்ணே இது சரியா முறையா
Girls::உன் தங்கச்சிக்கு பணக்கார பையன் நீ தேடும் போது நாம செய்ஞ்சா தவறா பிழையா
சும்மா போடா பன்னாடை ம்ம் யா யா

Boys::உங்க கிட்ட பேர கேட்டா குழைஞ்சு குழைஞ்சு பேசுறீங்க
நீங்க போகும் வழியில் வந்தா நெளிஞ்சு நெளிஞ்சு பாக்குறீங்க
காதல் சொல்ல வந்த மட்டும் செருப்ப கழட்டி காட்டுறீங்க
பாரதியார் கண்ட புதுமை பெண்ணை போல முறைகின்றீங்க
எதுக்கு இந்த அலுப்பறை வீணா வீணா எதுக்கு சிலுப்புறா
காலம் ரொம்ப கெட்டு கிடக்கு உன்ன பாக்க அப்பன் எதுக்கு நானு இருக்கா

Girls::மேக்கப் இல்லாம என் மனச மட்டும் பாக்கும் பையன் எங்கே இருக்கான்
அவன் காலில் விழுந்து என்ன கொடுப்பேன் தாயை போல அவனை காப்பேன்
வீட்ட விட்டு ஓடி வந்து அவன் மார்பின் ஓரம் மறைந்து நிப்பேன்
கட்டு சோறு கட்டி வந்து அவன் கேட்கும்நேரம் ஊட்டி விடுவேன்
காதல் கொண்டு என்னை வெல்லும் கள்ளன் யாருடா
தில்லு இருந்தா நீயும் வாடா நானா நீயா மோதிபார்போம் ஹா ஹா ஹா ஹா

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக