செவ்வாய், 17 செப்டம்பர், 2019

உண்மை காதல்

காதல் சம்பந்தமாக பல தரப்பு எழுத்தாளர்களால் எழுதப்பட்டாலும் உண்மை காதல் பற்றி ஒரு தேடல் எழுந்தது. முக புத்தகத்தில் வரும் பல கவிஞர்கள் காதல் பற்றி கவிதை வடிக்கும் போது அழகு சம்பந்தமாக எழுதுவார்கள். அப்படிபட்ட கவிஞர்கள் யாரையாவது காதலிப்பதாக இருந்தால் அந்த காதல் உண்மை என்று சொல்ல மாட்டேன். அவர்களின் பார்வை வெறும் அழகை மட்டும் சுற்றிய ஒரு குறுகிய வட்ட சிந்தனையில் எழுந்த காதலாக மட்டுமே பார்க்க முடியும்.

அடுத்து உன் அக்கா இல்லை என்றால், உன் தங்கை போதும் என்று கருத்து பட கவிதை புனையும் சில கவிஞர்கள், வெறும் ஒரு காமடி கவிஞர்களாகவோ,இல்லை பல டீன் ஏஜ் வயதில் உள்ள இளம் தலைமுறையை மையபடுத்தி எழுதும் கவிஞராகவோ பார்க்க முடியும். அவர்களின் காதல் வரிகள் ஒரு பணம் பண்ணும் இல்லை, தம்மை விளம்பர படுத்தும் நோக்கில் எழுதபட்ட கவியாக மட்டும் தான் பார்க்க முடியும்
காதலிக்கும் பெண்கள் எப்போதுமே காதலிக்கும் ஆண்களை செலவழிக்க மட்டுமே, பயன்படுத்தும் மணி பர்சாகவே பயன்படுத்துகின்றார்கள் என்று எழுதும் கவிஞர்களும்,உண்மை காதலை சொல்லவில்லை என்றே சொல்லலாம்.
ஆகவே உண்மை காதல் என்றால் என்ன? அது எப்போது வரும்? எந்த காதல் உண்மையில் வெற்றி பெறும்? ஆராயலாம்
காதல் என்பது உண்மையில் இன கவர்ச்சியில் ஆரம்பித்து அழகுணர்ச்சியில் பயணித்து புரிதலில் வெற்றி பெறும்.
டீன் ஏஜ் காதல் உண்மை காதலா?
ஒரு ஆணும் பெண்ணும் சாதாரணமாக பழகும் போது அதுவும் டீன் ஏஜ் இல் பழகும் போது அவர்களுக்கான பொறுப்பு மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது. இது ஆசிய நாடுகளில் டீன் ஏஜ் தாண்டிய பின்னும் தாய் தந்தையில் சார்ந்து இருக்கும் ஆண் பெண்களின் அளவு அதிகம் என்றே சொல்லலாம். இப்படி பொறுப்பு இல்லாமல் தாய் தந்தையின் உழைப்பில் வாழும் டீன் ஏஜ் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, அந்த வயதை தாண்டிய ஆணும் பெண்ணுமாக இருந்தாலும் சரி தமது உடற் கூறில் ஏற்படும் மாற்றத்தின் விளைவால் ஒரு பெண்ணிற்கு ஆணின் மீதும் ஒரு ஆணிற்கு பெண்ணின் மீதும் ஏற்படும் உடற் கவர்ச்சியை காதல் என்ற சொல்லை சொல்லி தம்மை தாமே ஏமாற்றுகின்றார்கள். இவர்களின் காதல் வேலை என்னவென்றால் ஒன்றாக சுற்றுவது, பீச்சுக்கு செல்வது, சினிமா செல்வது போன்ற பொழுது போக்கில் ஈடுபடுவது மட்டும் தான். இந்த பொழுது போக்கிற்கு பயன் படுத்தும் பணம் என்னவோ அந்த ஆணினதோ இல்லை பெண்ணினதோ தந்தையோ இல்லை தாயோ முதுகு முறிய சம்பாதித்த பணமே தான். எப்போது இன்னொருவரை வருத்தி இன்பம் காணும் காதல் ஏற்படுகின்றதோ அது உண்மை காதல் இல்லை. எந்த ஒரு டீன் ஏஜ் காதலாவது இல்லை அந்த வயதை தாண்டிய காதலாவது தாமே உழைத்து (காதலனும் காதலியும்) தமக்கு செலவளிக்கின்றார்களோ அந்த காதல் மட்டுமே வெற்றி பெறும். ஆகவே டீன் ஏஜ் காதல் அதிகளவில் உண்மை காதலாக இருக்கும் சாத்தியம் குறைவு என்றே சொல்லலாம். அத்துடன் டீன் ஏஜ் தாண்டியும் அப்பா அம்மா சம்பாத்தியத்தில் வாழும் ஆணும் பெண்ணும் செய்யும் காதலும் உண்மை காதலாக இருக்க முடியாது.
இருபத்தைந்து வயதிற்கு பின்னர் ஏற்படும் காதலை ஓரளவு உண்மை காதல் என்று சொல்ல முடியும். அந்த வயது ஓரளவு சமூக குடும்ப பிரச்சனைகளை சந்திக்க கூடிய மன வலிமையையும்
சரி பிழைகளை சீர் தூக்கி பார்க்கும் மன தெளிவையும் கொடுக்க கூடியது. ஆனாலும் காதல் பற்றி ஒரு கற்பனையில் வாழும் எந்தவொரு மனிதராலும் உண்மை காதலில் வெற்றி பெற முடியாது.
காதல் நடைமுறை வாழ்கையில் ஒன்றி ஆணின் உள் மனதை புரிந்த பெண்ணாலும் பெண்ணின் உள் மனதை புரிந்த ஆணாலும் மட்டுமே வெற்றி பெற முடியும்.
ஒரு ஆணும் பெண்ணும் எப்போது ஒருவரை ஒருவர் மனித நேயத்துடன் நோக்குகின்றார்களோ அப்போது தான் காதல் வெற்றி பெறும்.
பெண்ணின் உள் மனதை அறிய முடியாது என்பது ஆணாதிக்க சிந்தனை உள்ள ஆணின் கருத்தே தவிர நடைமுறை வாழ்கையில் அப்படி அறிய முடியா ரகசியம் எதுவும் இல்லை. ஒரு பெண்ணை மிக சரியாக அறிந்து வைத்திருப்பதால் தான் ஆண் இப்போதும் பெண்ணிற்கு எதிராக பாலியல் மோசடியிலும், பெண்ணிய கொடுமைகளிலும் ஈடு படுகின்றான்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக