உதவி வழங்கப்படும் போது படங்கள் எடுக்கப்பட்டு முகவலையில் பதிவிடுவது சரியா தவறா என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழுந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு. உதவிகள் வழங்கப்படும் போது உதவி பெறுபவரின் அனுமதி இன்றி அவர்களை படம் பிடிப்பதும் அதனை முகவலையில் பதிவு செய்வதும் ஏற்புடையது அன்று.ஆனாலும் உதவி வழங்குபவர்கள் வேறு தேசங்களில் வசிப்பதாலும் அவர்களின் உதவி சரியான நபர்களை சென்று அடைந்தது என்று தெரிவிக்கவுமே நாம் முகவலையில் உதவி பெறுபவர்களின் படங்களை தரவிறக்கம் செய்வதாக சம்பந்த பட்ட உறவுகள் கூறிக் கொண்டாலும் இது முழுவதுமாக கண்டிக்கப்படவேண்டிய செயலே.நீங்கள் உதவி செய்யுங்கள்.அதனை சம்பந்த பட்ட நபர்களுக்கு தனியாக அனுப்பி வையுங்கள்.அதனை விடுத்து உதவிகள் வழங்கும் போது உதவி பெறுபவர்களின் படங்களை முகவலையில் போடாதீர்கள்.உதவி செய்யும் பணியினை செய்யும் நீங்கள் தாராளமாக உங்கள் குழுவின் படங்களை மட்டும் பகிருங்கள்.அதில் எந்த தவறும் இல்லை. அதனை தவிர்த்து சம்பந்தபட்ட மக்களின் முகங்களை மிக தெளிவாக அனைவரும் பார்க்கும் படி தரவிறக்கம் செய்ய வேண்டாம்.அது மிகவும் வேதனையாக உள்ளது.ஒரு கூட்டமாக தூர வைத்து ஒன்று இரண்டு படங்கள் தரவிறக்கம் செய்யுங்கள். உதவி செய்யும் நல்ல உள்ளங்கள் இனிவரும் காலங்களில் இதனை கருத்தில் கொண்டு செயற்படுங்கள்...நீங்கள் செய்யும் உதவி செய்த நபர்களின் பெயர்களை போடுங்கள்..அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை..ஆனால் படங்களை எடுத்து முகவலையில் போட வேண்டாம் ...நன்றி
அன்புடன் காவியா
அன்புடன் காவியா
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக