செவ்வாய், 17 செப்டம்பர், 2019

என் மரணத்தின் போது கண்ணீர் சிந்தாதீர்கள்

என் மரணத்தின் போது
கண்ணீர் சிந்தாதீர்கள்
நான் எதனையும் சாதிக்கவில்லை
என்ற கவலைகள் என்
மனதை அடைத்துள்ளதால்
அகண்ட வெளியில்
பயணிக்கும் போது
மிகவும் கனமாகவே
என் உயிர் பறக்க முடியாமல்
தத்தளிக்கின்றது.


கண்ணை குருடாக்கும்
அந்த ஒளிவெள்ளத்தில்
என் கண்களை என்னால்
திறக்க முடியவில்லை
ஆனந்தமாக நான் மேற்கொள்ள
சென்ற பிரயாணம்
அந்தரத்தில் ஊசலாடுகின்றது


வாழ்வது கடினமானது
என்றே தற்கொலையை
தேர்ந்தெடுத்தேன்
ஆனால் அங்கே செல்லும்
பாதை இந்த வாழ்வை விட
பல மடங்கு முட்களாலும்
கற்களாலும் கொடிய மனிதராலும்
சூழ்ந்துள்ளது.


அணுவை போன்ற ஒரு சிறு
துளையில் மறைந்து
சொர்க்க கதவை தட்டிவிட
ஆசைகொண்டேன் பாவிகள்
சிலரின் கையில் கையில்
அகப்பட்டு சின்னபின்னாமாகின்றேன்


தவண்டு நெளிந்து மறைந்து
கை ஏந்தி மன்றாடி சொர்க்க கதவை
திறக்க நான் மேற்கொண்ட
முயற்சிகள் பயனற்று போனதால்
மீண்டும் பூமிக்கு வர
நான் எடுத்த முயற்சிகளும் பொய்த்து
போனது


என் உடல் நெரும்பில் சாம்பலாகி விட்டது
கங்கையில் கரைக்க ஒரு
கைபிடியளவு சாம்பலுடன்
முற்றுப் பெற்று விட்டதென
நான் நினைத்த பொழுதுகள்
பொய்யாகி போனது


என் அக்காவின் கருவறைக்குள்
ஒரு இடம் காலியாகி
இருக்கின்றது என்ற சேதியில்
இனி என் வாழ்நாளில்
தற்கொலை முடிவை தேடமாட்டேன்
நீயாக என்னை அழைக்கும்
வரை!!!


13/09/2015

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக