புதன், 8 ஜூலை, 2020

இலங்கையில் உள்ள தொல்லியல்

இலங்கையில் உள்ள தொல்லியல் திணைக்களமானது எப்போதும் மத்திய அரசின் கீழேயே இருந்தது. இது மாகாண சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததில்லை.
யாழ் கோட்டையில் 2017 ஆம் ஆண்டு ஆய்வில் ஈடுபட்ட பிரித்தானிய நாட்டை சேர்ந்த கோலின்ஹாம் என்ற தொல்லியல் ஆய்வாளரும், யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் புஸ்பரட்ணமும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் பங்குபற்றி இருந்தார்கள். அப்போது அங்கே கண்டு பல தொல்பொருட்கள் வெளிவந்தது. இந்த தடயங்கள் கி மு 3 நூற்றாண்டில் இல் இருந்து அதற்கு முந்திய கால தடயங்களாக வெளிவந்தவண்ணம் இருந்தது. அதனை கண்ணுற்ற இலங்கை குறித்த கோலின்ஹாம் இற்கு இனி விசா அனுமதி இல்லை என்று கூறியது அனைவரும் அறிந்ததே.
அதேபோல 1989 ஆம் ஆண்டு ஆனைக்கோட்டையில் நிகழ்ந்த ஆய்வில் கண்டெடுத்த எலும்புக்கூட்டை திலீபனின் எலும்புக்கூடு என்று இந்திய இராணுவம் அடித்து உடைத்தது. இதனால் அந்த எலும்புக்கூட்டின் கால எல்லையை நாம் கணிக்கவில்லை என்பது வேதனைக்குரிய உண்மையாகும்.
ஆனைக்கோட்டையில் கண்டு எடுக்கப்பட்ட கோவேந்தன்,கோவேதன் என வாசிக்கப்பட்ட இலச்சினையானது தொல்லியல் கூடத்தில் உண்டு.
அதுபோல கந்தரோடை, அனுராதபுரம் ஆகிய இடங்களில் கண்டு எடுக்கப்பட்ட ஆய்வுத் தடயங்கள் ஈழத்தமிழரின் நாகரீகம் கி மு 6 ஆம் நூற்றாண்டு வரை செல்கின்றது என கூறுகின்றது.
ஆகவே தயவுசெய்து இலங்கை தொல்லியல் திணைக்களமானது மாகாண சபையின் அதிகாரத்திற்குள் உட்பட்டு இருந்ததாக தவறான செய்திகளைபி பரப்பிட வேண்டாம் .
ஆதாரம் இணைப்பு
காவியா
06//07/20
08.46
லண்டன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக